சென்னை மெரினாவை மூடிய புழுதி காற்று.. எதிரே இருப்பவர்கள் யாரென கூட தெரியவில்லையே! அலறிய மக்கள்
சென்னை: சென்னை மெரினாவில் இன்று காலையில் திடீரென்று வானிலை மாறியது. மெரினா கடற்கரையில் புழுதி காற்று பயங்கரமாக வீசியது. கடற்கரையில் எதிரே நிற்பவர்கள் யாரென கூட பார்க்க முடியாத அளவுக்கு புழுதி காற்று பயங்கரமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அவசரஅவசரமாக சென்னை மெரினாவில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, மெரினா கடற்கரைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னையில் தினமும் காலையில் ஏராளமான மக்கள் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலையிலும் பொதுமக்கள் சென்னை மெரினா பீச்சில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு தரைக்காற்று அதிகமாக இருந்தது. கடல் கொந்தளிப்பு இல்லாவிட்டாலும் கூட அதிகப்படியான காற்றால் புழுதியை கிளப்பி விட்டது.

இதனால் பீச்சின் கடற்கரை மணலில் இருந்து புழுதிகள் பறந்து புகை மண்டலமாக்கியது. வழக்கத்துக்கு மாறாக திடீரென்று வீசிய புழுதி காற்றால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் கடற்கரையில் இருந்து வெளியேறினர். அதேவேளையில் ஒரு தரப்பினர் புழுதி காற்றுக்கு நடுவே போட்டோக்கள் எடுத்தனர்.
இதையடுத்து கடற்கரையில் உள்ள ஒலிபெருக்கியின் வாயிலாக பொதுமக்களுக்கு வார்னிங் செய்யப்பட்டது. உடனடியாக பொதுமக்கள் கடற்கரையில் இருந்து வெளியேறும்படி அறிவுரை வழங்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
மெரினா கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம். மெரினாவில் இருந்து உடனடியாக பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கண்காணிப்பு அறையில் இருந்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த புழுதி காற்று காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து தடை விதித்துள்ளனர்.
நொச்சிக்குப்பம், பெசன்ட்நகர் வரை தரைக்காற்று இன்று காலையில் அதிகமாக வீசியது. இருப்பினும் மெரினாவில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. குப்பைகள், பாலித்தீன் கவர்கள் பறந்தன. கடற்கரையையொட்டிய நடைப்பாதை, சாலைகளில் மணல் பறந்து விழுந்தன.
இதுபற்றி அங்கிருந்தவர்கள் கூறுகையில், ''காற்று திடீரென அதிகரித்துள்ளது. கடல் அலை பெரிதாக இல்லை. வழக்கம்போல் தான் உள்ளது. ஆனால் காற்று அதிகமாக இருப்பதால் வெளியேறும்படி கூறிவிட்டனர். சூறாவளி காற்று போல் உள்ளது.
மெரினாவில் புயல் சந்தர்ப்பங்களில் இப்படி நடந்து இருப்பதை கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் இப்போது நாங்கள் முதல் முறையாக நேரில் பார்க்கிறோம். பயமாகவும், அழகாகவும் உள்ளது. மணல் காற்றில் பறந்து கண்களில் விழுகிறது. புது அனுபவமாக இருக்கிறது. புழுதி புயல் வீசுவது போல் உள்ளது'' என்றார்.
-
சென்னை மின்தடைக்கு முற்றுப்புள்ளி? கடலூர், நகையில் இருந்து பறந்து வந்த ஸ்பெஷல் டீம்.. குட்நியூஸ் -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications