Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வந்த டச் பாய்மரக் கப்பல்! 750 வருட வணிக சாம்ராஜ்யத்தின் சின்னம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கப்பல் வணிகத் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் ஆம்ஸ்டர்டாம் விரைவில் தனது 750 ஆண்டுவிழாவைக் கொண்டாட இருக்கிறது.

ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டுவிட்டுச் சென்றுள்ள நிலையில், சென்னைக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பாய் மரக் கப்பல் வந்துள்ளது. இந்த நெதர்லாந்து கிளிப்பர் ஸ்டாட் ஆம்ஸ்டர்டாம் பாய்மரக் கப்பலின் மொத்த நீளம் 210 அடி. அதன் முழு எடை என்ன தெரியுமா? 1000 டன். இந்தக் கப்பல் தனது வணிக சாம்ராஜ்யத்தின் அடையாளமாக இப்போது சென்னை வந்துள்ளது.

chennai port

இங்கே டச் கம்பெனியுடன் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வர்த்தக சந்திப்பை டச்சு தூதர் மரிசா ஜெரார்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். கூடவே கப்பலையும் மக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். 76 மீட்டர் நீளமுள்ள கிளிப்பர், 31 பாய்மரங்களைக் கொண்டுள்ளது, மேலும் 30 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. பழங்காலத்தைச் சேர்ந்த இந்தக் கப்பலை எஃகு உலோகத்தை மறுகட்டமைப்பு செய்து மீண்டும் இயக்கி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகைச் சுற்றி வருகிறது இந்தக் கப்பல்.

முதலில் நெதர்லாந்து நாட்டிலிருந்து பாலி வந்து பின்னர் சிங்கப்பூரில் மையம் கொண்டது இந்தக் கப்பல். அதனைத் தொடர்ந்து இப்போது மூன்றாவதாகச் சென்னை வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு முதன்முதலாக டச் மக்கள் தான் வணிகம் செய்ய வந்தனர். இந்தியாவுக்கும் டச்சுக்குமான உறவு பல நூற்றாண்டுகள் முன்பே தொடங்கிவிட்டது.

இந்தப் பயணம் குறித்து பேசிய மாலுமி, "கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்திலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இந்தப் பயணத்தில் கடலில் நிலவும் பல்வேறு பருவநிலைகளை நாங்கள் கண்டு அனுபவித்து இருக்கிறோம். நடு கடல் என்பது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஆனால், முழு பயணமும் அமைதி நிறைந்தது இல்லை. பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளோம். பொதுவாகப் பாய் மரக் கப்பல் என்பது காற்றின் திசைக்கு ஏற்ப பயணம் செய்யக் கூடியது. ஆகவே, முழு கப்பலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும்.

chennai port

இந்தக் கப்பலில் மூன்று கோபுர தூண்கள் அமைந்துள்ளன. அதில்தான் காற்றின் விசைக்கு ஏற்ப பயணிக்கும் பாய்மரக் கொடிகள் கட்டுப்பட்டுள்ளன. அதன் மீது விழும் காற்றின் விசைக்கு ஏற்ப படகைச் செலுத்த முடியும். எளிமையாகச் சொன்னால், 'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்' என்ற எம்ஜிஆர் பாடலில் வரும் கப்பலைப் போல் இது காட்சி தருகிறது. அவை மூன்று ஸ்டீலில் செய்யப்பட்டவை. பாய் மரக் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால், முழுதும் எளிதாக எரிந்து சாம்பலாகிவிடும்.

ஆகவே, இப்போது தயாரிக்கப்படும் பாய்மரக் கப்பல்களை ஸ்டீலில் செய்ய தொடங்கிவிட்டனர். அந்தக் காலத்தில் கப்பலில் நேரத்தைக் கணிக்க ஒரு பெரிய ஆலய மணி அமைத்தார்கள். அது அரை மணிநேரத்திற்கு ஒருமுறை ஒலி எழுப்பும். இந்தக் கப்பலில் அதே மாதிரியான பித்தளை மணி ஒன்று உள்ளது. இந்தக் கால கப்பலில் எல்லாம் நவீன கடிகார வசதிகள், திசைக் காட்டிகள் வந்துவிட்டன" என்கிறார் இதன் மாலுமி. இந்தக் கப்பல் மூன்று பகுதிகளாக உள்ளன. முகப்பு பகுதியில்தான் கப்பலைச் செலுத்தும் மாலுமியின் அறை உள்ளது. இங்குதான் படகின் எஞ்சின் உள்ளது. நடுவில் பயணிகள் கூடும் பொது இடம் உள்ளது. பின்பகுதியில்தான் பயணிகள் ஏறும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 19 ஆம் நூற்றாண்டுவரை இந்த மாதிரியான பாய்மரக் கப்பலில்தான் வர்த்தகம் நடந்தது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு வணிக நோக்கில் வந்தவர்கள் பயன்படுத்திய இந்தக் கப்பல்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளன. அது குறித்து ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி, இதில் வர்த்தகம் செய்து வரும் ராஜீவ், "கப்பல் வர்த்தகத்தில் நெதர்லாந்து நாடுதான் முன்னோடி. நாங்கள் சென்னையில் இருக்கும் ஒரு டச் கம்பெனி. மெட்ராசுக்கு முதன்முதலாக வந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான். அவர்கள் வந்த பிறகுதான் பிரிட்டிஷ் கம்பெனி வந்தது" என்கிறார்.

chennai port

இந்தக் கப்பல் உள்ளே சென்றால் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறது. உள்ளே இருக்கும் மர வேலைப்பாடுகள் கண்களைக் கவரக் கூடியதாக இருக்கின்றன. அவ்வளவு அழகு. அதன் கீழே உள்ள தளத்தில்தான் பயணிகள் மற்றும் மாலுமிகள் உறங்கும் அறைகள் உள்ளன. இதைத் தவிர்த்து கப்பலை நிர்வகிக்கும் அறை எனத் தனியாக உள்ளது. அதன் உள்ளே தான் அனைத்து பழுது நீக்கும் உபகரணங்களும் உள்ளன. இந்தக் கப்பலில் பணிப் பெண்ணைத் தவிர்த்து பொறியாளராகக் கூட பெண்கள் பணி புரிகின்றனர். கப்பல் வணிகத் தொழில் கொடிகட்டிப் பறக்கும் ஆம்ஸ்டர்டாம் விரைவில் 750 ஆண்டுவிழாவைக் கொண்டாட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+