அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! கட்டடமே கட்டாமல் கணக்கு காட்டி மோசடி!
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா என்ற சத்யநாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018-19ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கு மாம்பலத்தில் கட்டடம் கட்டியதாக கணக்கு காட்டி ரூ.17 லட்சம் முறைகேடு செய்ததாகவும் புதிதாக கட்டடமே கட்டாமல் ஏற்கனவே இருந்த கட்டடத்தை சீரமைத்துவிட்டு புதிதாக கட்டியதுபோல் கணக்கு காட்டி நிதி முறைகேடு செய்துள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோடம்பாக்கத்தில் 3 இடங்களில் தரமற்ற கட்டிடங்களை கட்டி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் தி.நகர் சத்யா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ. 36 லட்சம் நிதி மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு செய்ததாக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மற்றும் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 11 பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகர் முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா, சென்னை பெருநகர மாநகராட்சி உதவிப் பொறியாளர்கள் இளங்கோவன், மணி ராஜா, ராதாகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் பெரியசாமி, முன்னாள் மண்டல அலுவலர் நடராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தி.நகர் சத்யா கடந்த 2016 முதல் 2021 வரை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதற்கு முன்னதாக கடந்த 2011 முதல் 2016 வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக செயல்பட்டார். 2021லும் தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட சத்யா வெறும் 137 வாக்குகளில் வெற்றியைத் தவறவிட்டார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!












Click it and Unblock the Notifications