எடப்பாடிக்கு ஸ்கெட்ச்! ஸ்டாலின் ஆக்சனில் செம ட்விஸ்ட்! இளங்கோவன் ரெய்டில் சிக்கியதன் பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் இளங்கோவன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சேலத்தில் எடப்பாடிக்கு நெருக்கம்

சேலத்தில் எடப்பாடிக்கு நெருக்கம்

தற்போது ரெய்டில் சிக்கியுள்ள இளங்கோவன் கூட்டுறவு வங்கியின் மாநில தலைவராக மட்டும் இல்லை சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலம் மாவட்ட அதிமுக பொறுப்பாளராகவும் இவர் செயல்பட்டு வந்தார். இவரை சேலத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என்றே கூறுவார்கள். அதிமுக ஆட்சியில் அரசு விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படும் அதே மரியாதை இளங்கோவனுக்கும் கொடுக்கப்படும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இளங்கோவனிடம் கலந்து பேசாமல் எடப்பாடி எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என்கிறார்கள்.

ரூ.600 கோடி டீல்

ரூ.600 கோடி டீல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கியை மையமாக வைத்து சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அப்போதே இது தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது இளங்கோவனிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு இளங்கோவனை மத்திய புலனாய்வு அமைப்புகள் எதுவும் டச் செய்யவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவனுக்கு இருந்த நெருக்கம் தான்.

எடப்பாடியுடன் நெருக்கமானது எப்படி?

எடப்பாடியுடன் நெருக்கமானது எப்படி?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த வரை சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை விட இளங்கோவன் தான் செம பவர்புல். காரணம் ஜெயலலிதா மட்டும் அல்ல சசிகலாவிற்கும் இளங்கோவன் மிகவும் நெருக்கம். அமைச்சர்கள் தொடர்புடைய அனைத்து வரவு செலவுகளையும் இளங்கோவன் தான் அப்போது மெயின்டெய்ன் செய்து வந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இளங்கோவன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த கால வரவு செலவுகளை அப்படியே ஒப்பிக்க, அவரை தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டார்.

Recommended Video

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை.. முதல்ல அங்க இருந்து ஆரம்பிங்க.. வானதி சீனிவாசன் பொளேர்
    எடப்பாடிக்கு ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

    எடப்பாடிக்கு ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

    முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்பி.வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வரிசையில் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் வீட்டிற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்துள்ளது. இதற்கு முன்னாள் நடைபெற்ற ரெய்டுகளின் போது கிடைத்த சில ஆவணங்கள் அந்த அமைச்சர்களுடன் இளங்கோவனுக்கு இருந்த தொடர்புகளை காட்டிக் கொடுத்துள்ளது. அந்த வகையில் இளங்கோவன் வீட்டில் ரெய்டு நடந்தாலும், சோதனை முழுக்க முழுக்க எடப்பாடியை சிக்க வைப்பதற்கான ஆதாரங்களை தேடியே நடைபெறுவதாக கூறுகிறார்கள்.
    அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமியை குறி வைத்து இளங்கோவன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறையை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியிருப்பது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+