கிராமப்புற தொழில் வளர்ச்சிக்காக கடன் அளிக்கும் Dvara KGFS நிறுவனத்திற்கு புதிய சிஇஓ நியமனம்
சென்னை: கிராமங்களில் தொழில் புரிவதற்காக உருவாக்கப்பட்ட தனியார் நிதி சேவையின் தலைமை நிர்வாக இயக்குநராக மூர்த்தி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Dvara KGFS (Dvara Kshetriya Gramin Financial Services Private Limited) என்பது நிதி சேவை புரியும் தனியார் நிறுவனமாகும். இது கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்களுக்கு 1.16 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுவரை 6 மாநிலங்களில் உள்ள கிராம மக்களுக்கு இவர்கள் கடன் வழங்கியுள்ளார்கள்.

இது வரை 17 ஆயிரம் கிராமங்களில் இவர்களது சேவையை பெற்று பயனடைந்துள்ளார். இதுவரை கிராமப்புற மக்கள் தொழில் தொடங்குவதற்காக ரூ 5,335.9 கோடி ரூபாயை கடனாக அளித்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் முக்கிய விஷயமே திட்டமிட்டு வாழ்க்கை பாதுகாப்பாக முன்னேறி சொந்த காலில் நிற்பதாகும். கிராமப்புறங்களில் இந்த நிறுவனத்தில் கடன் பெற்றவர்கள் இன்று நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். தமிழகம், ஒடிஸா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இவர்களுக்கான வாடிக்கையாளர்கள் உள்ளன.
எங்கோ தொலைதூர கிராமத்தில் மூலை முடுக்கில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இந்த நிறுவனம் கடன் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே சிஇஓவாக இருந்த ஜோபியிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக் கொண்டார். மூர்த்தி இந்த நிறுவனத்தில் தலைமை வர்த்தக அதிகாரியாக கடந்த 2016 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். சுமார் 24 ஆண்டுகள் நிதி துறையில் அனுபவம் கொண்ட இவர், 2019 ஆம் ஆண்டு துணை தலைமை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
மேற்கண்ட 6 மாநிலங்களில் 308 கிளைகளை கொண்டுள்ளது இந்த தனியார் நிதி நிறுவனம்.
-
சென்னை பெருங்குடி ஹாஸ்டலில் குளித்த 29 வயது பெண்.. மறைந்திருந்த இளைஞருக்கு மறக்க முடியாத சம்பவம் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications