BSNL ஃபேன்ஸி எண்களை வாங்கனுமா? இன்று முதல் டிச. 13 வரை ஆன்லைன் ஏலம்.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: BSNL ஃபேன்ஸி எண்களை பெறுவதற்கு இன்று முதல் டிசம்பர் 13-ந் தேதி வரை ஆன்லைன் ஏலம் (மின் ஏலம்) நடைபெறுகிறது.
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 07.12.2023 முதல் 13.12.2023 வரை எளிதாக நினைவில் நிற்கும் பி.எஸ்.என்.எல் மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 13.12.2023 ஆகும்.

மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில நபர்களுக்கு ஃபேன்ஸி எண் வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.குறிப்பாக, சிலருக்கு பிறந்த தேதி, ஆண்டு அல்லது வாகன எண் அல்லது ஏதோ பிடித்த எண் தொலைபேசி எண்ணின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ உள்ள எண்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தனி ஆர்வம் இருக்கும். சிலர் அலுவலக பயன்பாட்டிற்காக அல்லது குடும்ப உறுப்பினர்களுக்காக தொடர்ச்சியான எண்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். அனைவரின் ஃபேன்சி எண் தேவையை பூர்த்தி செய்வதற்காக, பிஎஸ்என்எல் பல்வேறு வகையான எளிதாக நினைவில் நிற்கும் எண்களை வழங்குகிறது.

ஆன்லைனில் வேனிட்டி எண்ணைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
• பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் "eauction.bsnl.co.in"
• இந்த தளத்தில் உள்ள "Login/Register" என்பதைக் கிளிக் செய்யவும்
• உங்கள் தற்போதைய மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடவும். இப்போது உங்கள் உள்நுழைவு விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
• உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டபின் உள்நுழைக.
• உங்கள் முன் காட்டப்படும் பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.
• இப்போது "Continue to card" என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும் (திரும்பப் பெறத்தக்கது)
• அடுத்து நீங்கள் விரும்பிய எண்ணை ஏலத்தில் எடுப்பதற்காக குறைந்தபட்ச ஏலத் தொகையைக் குறிப்பிடவும்.
• ஒவ்வொரு ஃபேன்ஸி எண்ணுக்கும் 3 பயனாளர்களை பிஎஸ்என்எல் தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள பயனாளர்களுக்கு அவர்களின் பதிவுக் கட்டணம் 10 நாட்களுக்குள் அதே ஆன்லைன் மூலம் திரும்ப செலுத்தப்படும்
• .தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயனாளர்கள் குறிப்பிட்ட ஏலத் தொகையின்படி எச்1, எச்2, எச்3 என வகைப்படுத்தப்படுவார்கள்.
• அதிக ஏலம் எடுப்பவருக்கு எண் ஒதுக்கப்படும். அவர் அதை எடுக்க விரும்பவில்லை என்றால், அடுத்தவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும்.
மின் ஏலத்தில் நம்பரை வென்றவருக்கு அடுத்த சில நாட்களில் எண் வழங்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications