இ பாஸ் முறை ரத்தா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இ பாஸ் நடைமுறையை தொடர்வதா இல்லை ரத்து செய்வதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 3.50 லட்சத்தை தாண்டியது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பதால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

E Pass is mandatory? TN Chief Secretary discusses with all collectorates

திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே இதுவரை இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் முதல் இ பாஸ் நடைமுறையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டன.

யார் விண்ணப்பித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் அவர்களுக்கு இ பாஸ் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என பண்டிகைள் வருவதால் தமிழகத்திலும் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து முடிவு செய்ய தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா, இல்லை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+