மருத்துவ விடுப்பில் ஜெயந்தி.. சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக தீரனிராஜன் நியமனம்
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்த ஜெயந்தி மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் அவருக்கு பதிலாக சென்னை மருத்துவக் கல்லூரியின் டீனாக தீரனிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீனாக இருந்தவர் ஜெயந்தி. இந்த மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து டீன் ஜெயந்தியும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள கடந்த 14-ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக தெரிகிறது. இவர் ஏன் விடுப்பில் சென்றார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. பொத்தாம் பொதுவாக இவர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார் என்றே அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புதிய டீனாக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக தீரனிராஜனை நியமித்தார் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன்.

தீரனிராஜன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் டீனாகவும் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications