திமுக பொதுச்செயலாளராகும் துரைமுருகன்... பொருளாளர் பதவிக்கு குறிவைக்கும் எ.வ. வேலு
சென்னை: திமுகவில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் மாற்றங்களால் எந்த பக்கத்தில் இருந்து எப்படி பூதம் கிளம்பும் என்கிற அச்சத்தில் இருக்கிறதாம் அண்ணா அறிவாலயம்.
சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து அப்பகுதியில் கட்சி ரீதியாக திமுக தலைவர் ஸ்டாலின் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையில் சேலம் வீரபாண்டி ஆ. ராஜாவு, தேர்தல் பணிக்குழு செயலாளராக்கப்பட்டார். இது அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

திமுக உட்கட்சி தேர்தல்
இந்நிலையில் திமுகவின் உட்கட்சி தேர்தல் ஜரூராக நடைபெற்று வருகின்றன. சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் உட்கட்சி தேர்தலில் வழக்கமாக வெடிக்கும் கோஷ்டி பூசல் எப்படியான தாக்கத்தை தரப்போகிறதோ என்கிற கவலை திமுக தலைமையிடம் இருக்கிறதாம். இதனால் உட்கட்சி தேர்தலின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறதாம் அறிவாலயம்.

பொதுச்செயலாளர், பொருளாளர்
இதனிடையே திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர்? அப்படி புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டால் பொருளாளர் யார்? என்கிற விவாதம் ஒரு பக்கம்.. இந்த பதவிகளுக்கான லாபிகள் இன்னொரு பக்கம் என அதிகாரப் போட்டியும் தொடங்கி இருக்கிறது. திமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக ஆக்டிவ் அரசியலில் இல்லை.

சீனியர்கள் பட்டியல்
இதனால் திமுகவின் புதிய பொதுச்செயலாளராக தற்போதைய சீனியாரிட்டி லிஸ்ட் படி துரைமுருகனுக்குத்தான் வாய்ப்பு. அதேநேரத்தில் துரைமுருகன் வசம் இருக்கும் பொருளாளர் பதவி யாருக்கு என்பதில்தான் பெரும் போட்டியே நிலவுகிறது. திமுகவின் சீனியர்கள் லிஸ்ட்டில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், திண்டுக்கல் ஐ பெரியசாமி, திருச்சி கே.என்.நேரு, ஆ. ராசா, விழுப்புரம் பொன்முடி என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

ஓவர்டேக் செய்யும் எ.வ.வேலு
இவர்கள் அத்தனை பேரையும் ஓவர் டேக் செய்து எப்படியாவது பொருளாளர் பதவியை பெற வேண்டும் என்பதில் எ.வ.வேலு முனைப்புடன் இருக்கிறாராம். எ.வ.வேலுவுக்கு கிச்சன் கேபினட் ஆசியும் இருக்கிறதாம். இதனால் இப்போதிருந்தே எ.வ.வேலு தரப்பு அத்தனை லாபிகளையும் முழு வீச்சில் தொடங்கி இருக்கிறது என்கின்றனர் சீனியர் திமுக நிர்வாகிகள்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications