பெட்ரோல் போடுறீங்களா.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டிய மிகப்பெரிய மாற்றம்.. என்ஜின், மைலேஜுக்கு சிக்கல்
சென்னை: நம் நாடு 2025 ஆம் ஆண்டில் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைந்துவிட்டது. அதாவது அரசு நிர்ணயித்த ஐந்து ஆண்டுக்கு முன்பே இலக்கை எட்டிவிட்டது. இதன் மூலம் இந்தியா சுமார் ₹1.36 லட்சம் கோடி வெளிநாட்டு செலாவணியை சேமித்துள்ளது.. இது எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் 2023-க்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் எத்தனால் கலக்ப்பட்ட பெட்ரோலுக்கு ஏற்றவை அல்ல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ஜின் பிரச்சனை வருகிறது என்றும், மைலேஜ் பிரச்சனை வருகிறது என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மத்திய அரசு "உயிரி எரிபொருளுக்கான தேசியக் கொள்கை - 2018" (National Policy on Biofuels - 2018) மற்றும் அதன் திருத்தங்களின் அடிப்படையில் பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டத்தை (Ethanol Blended Petrol - EBP) செயல்படுத்தி வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது, அந்நிய செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதை நோக்கமாக கொண்டு பெட்ரோலில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.

எத்தனால் கலப்பு
முதலில் 2030-ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை மத்திய அரசு நிர்யணயம் செய்தது. பின்னர், இந்த இலக்கு 2025-26-ஆம் ஆண்டுக்குள் எட்டப்படும் என்று மத்திய அரசு மாற்றியமைத்தது. இதன்படி, 2014-இல் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2022-இல் 10% என்ற இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே நிறைவேற்றி சாதனை படைத்தது மத்திய அரசு. அடுத்தாக தற்போது 2025-இல் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கையும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்திருக்கிறது மத்திய அரசு
ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடட்நத ஜூலை 24 அன்று, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை 2025-இல் இந்தியா வெற்றிகரமாக அடைந்துவிட்டதாக அறிவித்தார். இதுபற்றி ஹர்திப் சிங் பூரி கூறுகையில், "பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2014-இல் வெறும் 1.5 சதவீதத்திலிருந்து. ஆனால் 2025-இல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 11 ஆண்டுகளில் சுமார் 13 மடங்கு அதிகரிப்பு ஆகும். எத்தனால் உற்பத்தி 2014-இல் 38 கோடி லிட்டரிலிருந்து ஜூன் 2025-க்குள் 661.1 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது.
இறக்குமதி குறைவு
இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியா சுமார் ₹1.36 லட்சம் கோடி வெளிநாட்டு செலாவணியை சேமித்துள்ளது. அதே நேரத்தில், காய்ச்சி வடிகட்டும் ஆலைகளுக்கு ₹1.96 லட்சம் கோடி செலுத்தப்பட்டிருக்கிறது. இது உள்நாட்டு உயிரி எரிபொருள் துறையின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி உள்ளது. இதன் மூலம்
விவசாயிகளுக்கு ₹1.18 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் கிராமப்புற வருமானத்தை அதிகரித்துள்ளது. விவசாயப் பொருளாதாரத்தை ஊக்குவித்துள்ளது. "சுற்றுச்சூழல் பாதிப்பும் கணிசமாக குறைந்துள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலின் அதிகரித்த பயன்பாடு 698 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைந்தள்ளது. இது இந்தியாவின் காலநிலை இலக்குகளுக்கு பங்களித்துள்ளது" என்று கூறினார்.
2023க்கு முந்தைய வாகனங்கள் ஏற்றவை அல்ல
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியது போல் விவசாயிகளுக்கு நன்மையான திட்டம் தான். அண்ணிய செலவாணி கிடைத்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைந்துள்ளது. ஆனால் எத்தனால் கலந்து இந்த பெட்ரோல், 2023-க்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஏற்றவை அல்ல என்றும் இது வாகனங்களின் என்ஜினை விரைவாக பாதிக்கலாம் என்றும், மைலேஜை குறைக்கலாம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்கள் வாகன ஓட்டிகள்.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
இதை அனுபவத்தில் அறிந்த பல வாகன ஓட்டிகள், பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் தங்கள் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் எத்தனால் கலக்காத பெட்ரோல் ஆகிய இரண்டையுமே விற்க வேண்டும் என்றும், வாகன ஓட்டிகளுக்கு எது தேவையோ, அதனை தேர்வு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். எப்படி ஸ்பீட் மற்றும் நார்மல் என இரண்டு வகை பெட்ரோல் இருக்கிறதோ அது போல் எத்தனால் கலந்தது, கலக்காதது என்று இரண்டு பம்புகளை பெட்ரோல் நிலையங்களில் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாகன உற்பத்தியாளர்கள் சொல்வது என்ன
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி, தற்போது உள்ள பழைய வாகனங்களில் E20 (20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல்) பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்கள், E20 எரிபொருளில் திறமையாக இயங்க என்ஜின்-எரிபொருள் அமைப்பில் மாற்றங்கள் தேவைப்படும் என்றும். சில ரப்பர், எலாஸ்டோமர்கள் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் (காஸ்கெட், O-ரிங்குகள், எரிபொருள் குழாய் போன்றவை) புதிய E20 இணக்கமான பொருட்களால் ஆன பாகங்களால் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்
இந்தக் கருத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மட்டுமல்ல; பல பிற வாகன உற்பத்தி நிறுவனங்களுமே கூறியுள்ளன. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகளை சுட்டிக்காட்டி இருக்கின்றன. டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், "கேசோலினுடன் ஒப்பிடும்போது, எத்தனால் வெவ்வேறு ரசாயன பண்புகளைக் கொண்டிருக்கிறது. இது எரிபொருள் அமைப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பொருட்களுக்கு அரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இணக்கத்தன்மை பிரச்சனைகளால் பாகங்கள் சேதமடையலாம் அல்லது பழுதடையலாம்" என்று டிவிஎஸ் கூறியுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் தகவல்
எத்தனால் அதன் ஈரப்பதம் உறிஞ்சும் பண்புகள் காரணமாக சுற்றியுள்ள காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்க்க இயலும். வாகன உற்பத்தியாளர் இதைக் கணக்கில் கொள்ளாவிட்டால், இந்த நீர் உறிஞ்சுதல் காரணமாக அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
மைல்ஜ் குறைகிறது
வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல, வாகன ஓட்டிகளுமே மைலேஜ் தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள்.கோட்டயத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நான் டிசம்பர் 2022-இல் ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பாலினோ காரை வாங்கினேன். ஆனால் காலப்போக்கில், மைலேஜ் தொடர்ந்து குறைந்து வருவதை நான் கவனித்தேன். அதேசமயம் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை தனித்தனியாக விற்பனை செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
25000 செலவு
எவ்வளவு எத்தனால் கலக்கப்படுகிறது என்பதை நுகர்வோர் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறது.. ஆனால் எங்கள் வாகனத்திற்கு எது பொருத்தமானது என்பதைத் தேர்வு செய்ய எங்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொள்கை சீர்திருத்தம் என்ற பெயரில் என்ஜின்களுக்கு இந்த சேதத்தை யார் அனுமதித்தார்கள்? நான் இப்போது மாதத்திற்கு கிட்டத்தட்ட ₹25,000 பெட்ரோலுக்காக செலவிட்டு வருகிறேன் என்றார்.
சென்னை வாகன ஓட்டி
சென்னையைச் சேர்ந்த வாகன ஓட்டி கூறுகையில், "நான் 2022 மாருதி சுசுகி பிரெஸ்ஸா காரை வாங்கினேன். மைலேஜ் முன்பு கிடைத்த 17-18 கி.மீ/லிட்டரில் இருந்து 14 கி.மீ/லிட்டராக கடுமையாக குறைந்துள்ளது. மேலும் மந்தமான பிக்அப் தான் கிடைக்கிறது. இது ஒரு புதிய மாடல், எரிபொருள் திறன் குறைந்துவிட்டது. இது எத்தனால் கலப்பின் அறிகுறி என்று நினைக்கிறேன் என்றார்.
மாருதி கார்
இதேபோல் இன்னொரு நெட்டிசன் கூறுகையில், 2015 மாடல் ஆல்டோ K10 காரை வாங்கினேன். கார் வாங்கியதிலிருந்து, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 முதல் 20 கி.மீ வரை மைலேஜ் தொடர்ந்து அளித்து வந்தது. E20 பெட்ரோலை சமீபத்தில் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆனால் என் கார் இப்போது மைலேஜ் விஷயத்தில் சரியாக இல்லை என்றார்.
இறுதியான கோரிக்கை என்ன
எத்தனால் கலப்பால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்றாலும் என்ஜின் பழுது மற்றும் மைலேஜ் பிரச்சனை வருவதாக பொதுவாவே வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள். புதிய வாகனங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்றும் பழைய வாகனங்களில் மைலேஜ் பாதிப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள். அரசு எத்தனால் கலந்த, கலக்காத பெட்ரோல் பம்புகளை பெட்ரோல் நிலையங்களில் வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு.. எந்த நாட்டில் என்னென்ன கட்டுப்பாடுகள் .. முழு விவரம் -
பெட்ரோல் விலை ரூ.5.30 வரை உயர்வு.. டீசல் ரூ.3 வரை அதிகரிப்பு.. இடியை இறக்கிய நயாரா நிறுவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications