நாளை முதல் நாடு முழுக்க 'புதுவகை' பெட்ரோல் கட்டாயம்.. மைலேஜ் குறையுமா.. மக்கள் அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

கச்சா எண்ணெய் இருப்பு, அரபு நாடுகளில் நிலவும் சூழல் மற்றும் நாட்டின் இறக்குமதி சார்ந்த பல்வேறு சவால்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் ஏப்ரல் 1ம் தேதியான நாளை முதல் e20' பெட்ரோல் என்ற புதிய வகை பெட்ரோல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆக்டேன் 95 இதில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த புது வகை பெட்ரோல் மக்களின் பலரும் நினைப்பது போலவே இதில் சில சவால்களும், அதே சமயம் அரசு கொண்டு வந்துள்ள சில பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கின்றன. அவற்றை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

E20 பெட்ரோல் என்பது 80% பெட்ரோல் மற்றும் 20% எத்தனால் கலந்த ஒரு கலவை எரிபொருள் ஆகும். இதில் 'E' என்பது எத்தனாலைக் குறிக்கும், '20' என்பது அதன் சதவீதத்தைக் குறிக்கும். 20 சதவீதம் எத்தனால் கலந்து பெட்ரோலை விற்க மத்திய அரசு முடிவு செய்து அதனை நாளை முதல் கட்டாயம் ஆக்கி உள்ளது. பலரும் அறிய வேண்டியது எத்தனால் என்ன என்பது தான்.. எத்தனால் என்பது ஒரு வகையான உயிரி எரிபொருள் தான். இது முக்கியமாக கரும்புச் சாறு, சோளம், கோதுமை மற்றும் அழுகிய தானியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகும்.

E20 Petrol

எத்தனாலை கலக்க மத்திய அரசு மூன்று முக்கிய காரணங்களை கூறியிருக்கிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதன் மூலம், வெளிநாடுகளுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்க முடியும். இப்போது அரபு நாடுகளில் போர் சூழலில் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய படாதபாடு படுகிறது. வெளிநாடுகளில் டாலர்களை கொட்டி இறக்குமதி செய்கிறது. ஆனால் டாலர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மறுபுறம் கச்சா எண்ணெய்விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

சாதாரண பெட்ரோலை விட எத்தனால் கலந்த பெட்ரோல் எரியும் போது கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் குறைவாகவே வெளியேறும். அதேபோல் கரும்பு மற்றும் தானியங்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால் எத்தனால் கலந்த பெட்ரோலை போட்டால் மைலேஜ் குறைகிறது என்றும், இந்த பெட்ரோலை போட்டு வாகனம் ஓட்டினால் என்ஜின் பழுதாகும் என்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இது வெறும் குற்றச்சாட்டு மட்டுமல்ல.. இதில் ஓரளவு உண்மையும் இருந்தது என்கிறார்கள வாகன பராமரிப்பு தொழில் செய்வோர். உண்மையில் மைலேஜ் குறையுமா என்றால்.. ஆம், உண்மைதான். எத்தனால் என்பது பெட்ரோலை விட குறைந்த ஆற்றல் அடர்த்தி ( கொண்டது. சுத்தமான பெட்ரோலை விட எத்தனாலில் சுமார் 30% ஆற்றல் குறைவு. எனவே, 20% எத்தனால் கலந்த பெட்ரோலில் (E20) ஓடும்போது, என்ஜின் அதே வேகத்தைப் பெற அதிக எரிபொருளைப் பயன்படுத்தும்.

எவ்வளவு குறையும்? அரசு ஆய்வுகளின்படி 1% முதல் 6% வரை குறையலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில், பழைய வாகனங்களில் 7% முதல் 10% வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

வாகன ஓட்டிகள் சொல்வது போல் என்ஜினில் பாதிப்பு ஏற்படுமா? எத்தனால் இயற்கையிலேயே ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இது வாகனத்தின் சில பாகங்களை பாதிக்கலாம் என்பது உண்மை என்கிறார்கள். எரிபொருள் டேங்க் இரும்பினால் செய்யப்பட்டிருந்தால், எத்தனால் ஈர்க்கும் நீரால் துருப்பிடிக்க வாய்ப்பு உண்டு. பழைய வாகனங்களில் உள்ள ரப்பர் குழாய்கள் மற்றும் கேஸ்கெட்டுகள் (Gaskets) எத்தனாலால் அரிக்கப்பட்டு சீக்கிரம் பழுதடையலாம் என்று வாகன பராமரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

புதிய பாதுகாப்பு

இந்த புகார் மற்றும் பிரச்சனைக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பாதுகாப்பு (RON 95) என்ன என்பதை பார்ப்போம். மைலேஜ் மற்றும் என்ஜின் பாதிப்பு குறித்த புகார்கள் அதிகரித்ததால், ஏப்ரல் 1, 2026 முதல் அரசு ஒரு புதிய விதியைக் கட்டாயமாக்கியுள்ளது: இனி விற்கப்படும் E20 பெட்ரோல் குறைந்தபட்சம் 95 ஆக்டேன் (Octane) தரம் கொண்டதாக இருக்க வேண்டும். சாதாரண பெட்ரோல் 91 ஆக்டேன் அளவில் இருக்கும். இந்த உயர் ஆக்டேன் (95 RON) எரிபொருள் சீராக எரிந்து, என்ஜின் 'நாக்கிங்' ஆவதைத் தடுத்து, என்ஜின் ஆயுளைப் பாதுகாக்க உதவும்.

ஆக்டேன் 95 என்றால் என்ன

ஆக்டேன் 95 என்ன என்று பலருக்கும் தெரியாது.. அவர்களுக்கான சிறு விளக்கத்தையும் பார்ப்போம்.. ஆக்டேன் எண் என்பது ஒரு பெட்ரோலின் "எரிதல் திறன்" மற்றும் "வெடிப்பு எதிர்ப்புத்திறன்" ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு அளவீடு ஆகும். பெட்ரோல் என்ஜினுக்குள், பிஸ்டன் காற்றையும் பெட்ரோலையும் அழுத்தும்போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தீப்பொறி பாய்ந்து பெட்ரோல் எரிய வேண்டும். ஆனால், சில சமயம் என்ஜினில் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக, தீப்பொறி வரும் முன்பே பெட்ரோல் தானாகவே வெடித்துவிடும். இதனால்தான் என்ஜினுக்குள் 'தட்-தட்' என்று ஒருவித சத்தம் கேட்கும். இதையே நாம் 'நாக்கிங்' என்கிறோம். இது என்ஜினின் ஆயுளைக் குறைக்கும்.

ஆக்டேன் எண்

இந்த 'நாக்கிங்' பிரச்சனையைத் தடுக்க பெட்ரோலில் சேர்க்கப்படும் ஒரு தரம் தான் ஆக்டேன் எண். ஆக்டேன் எண் அதிகமாக இருந்தால்: அந்த பெட்ரோல் கட்டுப்படுத்தப்பட்ட முறையில், சரியான நேரத்தில் சீராக எரியும். அதாவது, என்ஜினில் தேவையில்லாத அதிர்வுகள் அல்லது சத்தங்கள் (நாக்கிங்) ஏற்படாது. ஆக்டேன் எண் குறைவாக இருந்தால் அது எளிதில் வெடித்து , என்ஜினுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஏன் 95 ஆக்டேன் கட்டாயம்

பொதுவாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சாதாரண பெட்ரோல் 91 ஆக்டேன் கொண்டது. இப்போது நாம் பயன்படுத்தும் E20 (20% எத்தனால்) கலவையில் எத்தனால் இருப்பதால், அது எளிதில் தீப்பற்றக்கூடியது (என்ஜினுக்குள்). இது நாக்கிங் பிரச்சனையை உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பை ஈடுகட்டவும், என்ஜின் சீராக இயங்கவும், E20 பெட்ரோலை 95 ஆக்டேன் தரத்திற்கு உயர்த்த வேண்டியது அவசியம் ஆகும். அதாவது, 95 ஆக்டேன் என்பது உங்கள் என்ஜினுக்குக் கிடைக்கும் 'உயர்தர பாதுகாப்பு' என்று வைத்துக்கொள்ளலாம்.

வாகனத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

உங்கள் வாகனம் எப்போது வாங்கப்பட்டது என்பதைப் பொறுத்து இது மாறுபடும். ஏப்ரல் 2023-க்கு பிறகு வாங்கியிருந்தால்: கவலைப்படத் தேவையில்லை. இவை ஏற்கனவே 'E20 Ready' வாகனங்கள். எந்த மாற்றமும் தேவையில்லை. அதற்கு முந்தைய பழைய வாகனம் என்றால், ரப்பர் டியூப்கள் மற்றும் சீல்களை எத்தனால் தாங்கும் வகையிலான பாகங்களாக மாற்ற மெக்கானிக்கிடம் ஆலோசிக்கலாம். வாகனத்தை நீண்ட நாட்கள் எடுக்காமல் நிறுத்தி வைக்கக் கூடாது.. அப்படி பிரித்தால் எத்தனால் தண்ணீராகப் பிரிய வாய்ப்புண்டு. சில நிறுவனங்கள் பழைய வாகனங்களுக்காக 'E20 Conversion Kits' அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன, அதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

பாதிப்பு குறையும்

தெளிவாக சொல்வது என்றால், மைலேஜ் சற்று குறையும் என்பது கசப்பான உண்மைதான். ஆனால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அரசு இதை அமல்படுத்துகிறது. 95 RON கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் என்ஜின் பாதிப்பு ஓரளவுக்குக் குறையும் என்று வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+