சின்ன கல்லு.. பெரிய லாபம்! இதை மட்டும் செஞ்சா...செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் கொட்டும்!
சென்னை: மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பல லட்சங்களை எளிதாக சேமிக்கும் முறை ஒன்று உள்ளது. இந்த முறையை பயன்படுத்தி 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி சேமிப்பது?
10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
திட்டத்தின் வேறு அம்சங்கள்
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் ஆகும். அருகில் இருக்கும் அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்த தொகையை செலுத்தி கணக்கை தொடங்க முடியும். பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை செலுத்த முடியம். அதிகபட்சம் 1.5 லட்சம் வரை மாதம் வைப்பு தொகையாக செலுத்த முடியும்.
இந்த சேமிப்பு தொகையை வருமான வரி ரிட்டர்ன் செலுத்தும் போது காட்டி வருமான விலக்கு பெற முடியும். உதாரணமாக 1.5 லட்சம் ரூபாய் மாதம் காட்டுகிறீர்கள் என்றால் அதற்கு விலக்கு பெற்றுக்கொள்ள முடியும். வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் இடையில் உங்களுக்கு இடையில் பணம் தேவைப்படுகிறது.
உதாரணமாக பெண்ணின் மேல்படிப்பிற்கு பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதுவரை சேமித்து வட்டியோடு இருக்கும் பணத்தில் 50 சதவிகிதத்தை.. அதாவது பாதியை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு தேவையான ஆவணங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோல் மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் கூடுதல் வட்டிக்கும் கூட வருமான வரி செலுத்த தேவை இல்லை.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications