"கரண்ட் பில்" தாறுமாறா வருதா.. மின் கட்டணத்தில் வருகிறது மாற்றம்.. சென்னைக்கு ஹேப்பி.. தமிழக அரசு செம
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், கரண்ட் பில் கணக்கீட்டில் புது மாறுதல் துவங்கப்படுகிறது. இதற்கான முன்னெடுப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கையில் எடுத்து வருகிறது.. என்ன அது?
தமிழகத்தில், மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாக சமீபத்தில் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. இந்த முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்கு கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் "ஸ்மார்ட்' மீட்டர்" திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசு: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் கீழ், மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதுவும் துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் . அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. அதற்கான கட்டண விவரம் sms மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
ஸ்மார்ட் மீட்டர்கள்: வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவற்றை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது..
அந்தவகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் தொடங்கபோவதாகவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது. சுமார்19,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டடே தொடங்கப்பட்டு, வரும் மார்ச் 2025க்குள் முடிக்கப்பட உள்ளதாகவும் காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) இன்னொரு அதிரடியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வீடுகளில், "புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை" இணைக்கும் திட்டம் உள்ளதாம். தாறுமாறாக காட்டும் கரண்ட் பில் பிரச்சனைக்கு இந்த புளூடூத் ஸ்மார்ட் மீட்டர்களில், ஒரு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பீகார் மாநிலத்தில், இது நடைமுறையில் உள்ளது.. அங்குள்ள மக்கள், தங்கள் மொபைலின் புளூடூத்தை ஸ்மார்ட் மீட்டருடன் இணைப்பதன் மூலம், தங்கள் வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்படுவது குறித்த தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள்.. ஒவ்வொரு நாளும் இருப்புத்தொகை கழிக்கப்பட்ட பிறகு, நுகர்வோர் முதலில் தங்கள் இருப்பை பயன்பாட்டில் சரிபார்க்கிறார்கள்..
ஆய்வுகள்: அந்தவகையில், சோதனை அடிப்படையில் சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி, அதைவைத்து, ஆய்வுகளை விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.
குறிப்பாக, மடிப்பாக்கம், கவுரிவாக்கம் பகுதிகளில் மின் கணக்கீட்டாளர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்.. அதனால், அந்த பகுதிகளில் ப்ளுடூத் மீட்டர்கள் பயன்பாட்டை கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அந்த பகுதிகளில் இந்த திட்டம் சரியாக அமைந்துவிட்டால், அடுத்த மாதமே இந்த ப்ளுடூத் மீட்டர் திட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டு அடுத்தடுத்த பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
செல்போன்கள்: வீடுகளில் இந்த ப்ளூடூத் மீட்டரை பொருத்தி விட்டால், ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் அதனை கண்காணிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போன்களுக்கும், இந்த தகவல்கள் அனுப்பப்படும் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், மின் கணக்கீட்டாளர்களின் பணியை, இந்த ப்ளூடூத் மீட்டர் செய்கிறது. இதனால் கால நேரம் குறைவதுடன், துல்லியமான கரண்ட் பில் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளலாம்
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications