"ஷாக்கடித்த" மின் கட்டணம்.. தூக்கியடித்த "கரண்ட் பில்".. பெரிய பாதிப்பு.. கோட்டைக்கு பறந்த கோரிக்கை
சென்னை: வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த உத்தரவை உடனே பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அதன்படி, டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சமாளிக்க அரசிடம் இருந்து மின் வாரியம் கடன் வாங்கி வருகிறது. அந்த வகையில் மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.
கடன் சுமை: ஆனாலும் நிலக்கரி கொள்முதல், மின் வினியோக வழித்தடம் பராமரித்தல், துணைமின் நிலையங்கள் அமைத்தல், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது.
எனவேதான், மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தபோது, கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.. அதன்படி, செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்கு முறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.

கட்டண உயர்வு: அதன்படிதான், வீடுகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் ரூ.2.25 வசூலிக்கப்படுகிறது.. அதாவது, 400 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ.4.60 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள்... 401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை ரூ.9-ம், 801-1000 யூனிட் வரை ரூ.10-ம் 1001 யூனிட் மேல் 1 யூனிட் ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் பண வீக்கம் 4.70 சதவீதம் இருந்த நிலையில், 4.70 சத வீதம் வரை மின்கட்டணம் உயர்த்த வேண்டும்... வீட்டு பயன்பாட்டுக்கு உரிய மின் கட்டணம் யூனிட்டுக்கு 11 பைசா உயரக்கூடும் என்று செய்திகள் பரவின.. எப்படியும், ஜூலை மாதம் முதல், இந்த மின் கட்டணத்தை உயர்த்த ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதன்படி பார்த்தால் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 11 பைசா அதிகரிக்கும், கடைகளுக்கு 30 பைசா யூனிட்டுக்கு அதிகரிக்கும் என்றும் சொன்னார்கள்..
பொருமல்கள்: இப்போது 4.70 சதவீத மின்கட்டண உயர்வு என்பது சிறிய தொகைதான் என்றாலும், பரவிவரும் இந்த தகவலை கேட்டு பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. இன்னும் ஒருவருடம்கூட முடியவில்லை. அதற்குள் 2வது முறை மின் கட்டணத்தை உயர்த்துவது சரியாக இருக்காது என்ற பொருமல்கள் கிளம்பின.. இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளும் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கைகளை விட ஆரம்பித்தன.
மாநிலத்தில் சுமார் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த மின் கட்டண உயர்வு சுமையை ஏற்படுத்தும் என்று மாஜி அமைச்சர் உதயகுமாரும் வலியுறுத்தினார்.. இதே கருத்தைதான் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக அரசு இதுகுறித்து செய்திக்குறிப்பினை வெளியிட்டுள்ளது.
இலவசங்கள்: அதில், வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதே சமயம் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது. பாமக தலைவர் ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்:
1. தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் முதல் உயர்த்தப்படுவதாகவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு 4.7 விழுக்காட்டிற்கு மாற்றாக 2.18% என்ற அளவிலேயே இருக்கும் என்றும், அதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதால் வீடுகளுக்கு மின்கட்டண உயர்வு இருக்காது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
நிம்மதி தருகிறது: மின்கட்டண உயர்வு என்ற பெரும் சுமையிலிருந்து வீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிக்கிறது.
2. 10 மாதங்களில் இரண்டாவது முறையாக செய்யப்படவிருக்கும் மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று முதன்முதலில் நான் தான் கடந்த 4-ஆம் நாள் வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று வீடுகளுக்கான மின்சாரக் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.
நிறுவனங்கள்: அவற்றுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 13 காசு முதல் 21 காசு வரை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை பெரு நிறுவனங்களால் தாங்கிக் கொள்ள முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை கண்டிப்பாக தாங்கிக் கொள்ள முடியாது.
3. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல், விசைத்தறி உரிமையாளர்களும் மின்கட்டண உயர்வின் தாக்கங்களை தாங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர்.
தாங்க முடியல: சிறு வணிகர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதி மின்கட்டணம் செலுத்துவதற்கே செலவாகி விடுகிறது. இந்த பாதிப்புகளைப் போக்க கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மீண்டும் ஒரு மின்கட்டண உயர்வை திணிப்பது எந்த வகையிலும் சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது.
4. தொழில் நிறுவனங்கள் வேறு வழியின்றி தாங்கிக் கொள்கின்றன என்பதற்காக அவற்றின் மீது தொடர்ந்து கட்டண உயர்வு சுமை சுமத்தப்பட்டுக் கொண்டே இருந்தால், அவை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் முறிந்து விடும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அது எந்த வகையிலும் உதவாது. அதைக் கருத்தில் கொண்டு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டண உயர்வையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications