அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக.. அதென்ன அப்பா அம்மா மக்கள் கழகம்! ஆக்ஷனில் இறங்கிய தேர்தல் ஆணையம்!
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஆயிரக்கணக்கில் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றில் ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 340க்கும் மேற்பட்ட கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 24 கட்சிகள் அந்த பட்டியலில் இருக்கின்றன. அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பா அம்மா மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி முறை அல்லது இரு கட்சி ஆட்சி முறை இருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம், கட்சி ஆரம்பிக்கலாம்.
அந்த வகையில் இந்தியா முழுவதும் பிரதான கட்சிகள் தவிர்த்து சிறிய சிறிய கட்சிகளும், லெட்டர் பேடு கட்சிகளும் இருக்கின்றன. ஆட்களே இல்லாவிட்டாலும் ஒருவரால் கட்சி ஆரம்பிக்க முடியும். அப்படி நம் நாட்டில் கட்சிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தமிழகத்திலும் அப்படித்தான்.

இந்த நிலையில் பெயருக்கு கட்சியை ஆரம்பித்து விட்டு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறியுள்ள மற்றும் இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகள் என்பதன் காரணமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPPs) முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் திரு. ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் தொடங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாததும், அவற்றின் அலுவலகங்கள் எந்த இடத்திலும் அடையாளம் காணப்படாததன் காரணமாகவும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 345 RUPPs அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் இத்தகைய கட்சிகளை அடையாளம் காணும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதனடிப்படையில் 345 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின், அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்). 1951ஆம் ஆண்டின் மக்களாட்சித் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவின் கீழ், அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் வரிவிலக்கு போன்ற 160 நன்மைகளை பெறுகின்றன.
2019ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றம் மற்றும் மாநில/யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களில் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்தத் தேடல் பணியின் முதல் கட்டமாக 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்பை சீர்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் அது போன்று 24 அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பட்டியல் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பா அம்மா மக்கள் கழகம், தமிழ் மாநில கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, வளமான தமிழகம் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அதன்படி, அனைத்திந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அனைத்திந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக்கழகம், அப்பா - அம்மா மக்கள் கழகம், தேச மக்கள் முன்னேற்றக் கழகம், காமராஜர் மக்கள் கட்சி, இந்தியா மக்கள் முன்னேற்றக்கட்சி, இண்டியன்ஸ் விக்டரி பார்ட்டி, மகாபாரத் மகாஜன் சபா, மக்கள் நீதிக்கட்சி - இந்தியா, மீனவர் மக்கள் முன்னணி, நல்வளர்ச்சிக் கழகம் தேசிய ஸ்தாபன காங்கிரஸ், தேசியவாத அறக்கட்டளை காங்கிரஸ், நியூ லைஃப் பீப்பிள்ஸ் பார்ட்டி, பசும்பொன் மக்கள் கழகம், சமூக மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், வளமான தமிழகம் கட்சி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி அனுப்பி, அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி பட்டியலில் இருந்து இந்த கட்சிகள் நீக்கப்படும் என கூறுகின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications