சேமிப்பு + முதலீடு = செல்வம்.. லோன் வேண்டாம்! குழந்தையின் கல்விக்காக இப்போதே SIPயில் முதலீடு செய்யுங்க
சென்னை: குழந்தையின் கல்விக்காக சேமிக்க விரும்புகிறீர்களா, அப்படியென்றால் இப்போதே எஸ்ஐபியில் முதலீடு செய்யுங்கள்.
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். அந்த வகையில் நாம் சம்பாதிக்கும் காசில் ஒரு பங்கையாவது சேமித்து வைக்க வேண்டும். stock எனப்படும் கையிருப்பு என்பது மிகவும் முக்கியமானது.

குழந்தைகளின் கல்வி, உயர்கல்வி, திருமணம், வீடு வாங்குதல், வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், கார் வாங்குதல் என ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் தனியார் பணியாளர்களுக்கு?
எனவே நாம் வாங்கும் ஊதியத்தில் நம்மால் முடிந்த தொகையை சேமிக்க வேண்டும். இதற்காக எஸ்ஐபி எனப்படும் systematic investment plans இல் முதலீடுகளை செய்யலாம். இதுகுறித்து பொருளாதார நிபுணர் கே. ராஜேஷ் மூர்த்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: உங்களது குறுகியகால மற்றும் நீண்டகால தேவைகளை SIP மூலமாக நிறைவேற்றிக்கொள்ள எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
ஒரு சிறிய ready-reckoner...
சேமிப்பு + முதலீடு = செல்வம்.
முதலில் குழந்தை கல்விக்கான லட்சியத்தை அடைய
SIP யில் மாதம் 10 ஆயிரம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு 25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 8 ஆயிரம் 12 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு 35 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 7 ஆயிரம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு 42 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அது போல் கார் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்க வேண்டுமா
SIP யில் மாதம் 9 ஆயிரம் 6 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 9 ஆயிரம் 8 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 15 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 20 ஆயிரம் 6 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 22 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
விடுமுறையில் வெளிநாடு செல்ல வேண்டுமா
SIP யில் மாதம் 13 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 8 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 16 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஓய்வு பெற்றவுடன் உங்கள் செலவுக்கு பணம் சேமிக்க
SIP யில் மாதம் 16 ஆயிரம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 2 கோடி ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 20 ஆயிரம் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 5 கோடி ரூபாய் கிடைக்கும்.
SIP யில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுக்கு தோராயமாக 11 கோடி ரூபாய் கிடைக்கும்.
இவ்வாறு ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது முற்றிலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள் என ஆலோசனை வழங்குவதற்காக அல்ல, இருக்கும் யதார்த்தங்களை சொல்கிறோம். அதில் முடிவு எடுத்துக் கொள்வது நீங்கள்தான். அதற்கான ரிஸ்க் காரணிகளையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். முதலீடு செய்யும் முன்பு ஆவணங்களை நன்கு படித்து பாருங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications