ஐடி நிறுவன பணி நீக்கம்.. உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ரிஸ்க் அதிகரிப்பு: ஆய்வறிக்கை வார்னிங்
சென்னை: உலக அளவில் லே ஆப் தொடங்கி உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ரிஸ்க் அதிகரித்துள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் மேற்பார்வையில் இந்த அறிக்கை தயார் ஆகி உள்ளது.

போக்குவரத்து
சாலை போக்குவரத்து துறை: ஏப்ரல் - நவம்பர் நிதி ஆண்டு 2023ல் 1.49 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது
மருத்துவ துறை: செப். 2022 வரை மருத்துவ துறையில் அந்நிய முதலீட்டு 20 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது . கடந்த 5 வருடங்களில் மருத்துவ துறையில் அந்நிய முதலீடு 5 மடங்கு உயர்ந்து உள்ளது .
எஃகு துறை: நாடு இப்போது ஸ்டீல் உற்பத்தியில் உலகளாவிய சக்தியாக திகழ்கிறது. உலகின் 2வது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராகவும் உள்ளது. ஸ்டீல் உற்பத்தி 88 மெட்ரிக் டன்னாகவும், ஸ்டீல் விற்பனை 86 டன்னாகவும் உள்ளது.

ஜிடிபி
2023ல் ஜிடிபி உயர அதிக மூலதனச் செலவு முக்கிய காரணமாக இருக்கும். சிறு வணிகங்களுக்கான கடன் வளர்ச்சி, வெளிமாநில பணியாளர்கள் பணிக்கு திரும்புவதும் இதற்கு காரணமாக இருக்கும்
ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிநடத்தும்.
மருத்துவ துறை: கடந்த 4 வருடங்களாக மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. மாநில - மத்திய பட்ஜெட்டில் 2023 நிதி ஆண்டில் மருத்துவத்துறைக்காக 2.1% ஒதுக்கப்பட்டது

வேலைவாய்ப்பு
வங்கிகள் குறைவான வருமானத்தையும், லாபத்தையும் பதிவு செய்துள்ளது. இதற்கு இடையில் அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. உலக அளவில் லே ஆப் தொடங்கி உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ரிஸ்க் அதிகரித்துள்ளது.

பணவீக்கம்
பெருந்தொற்றில் இருந்து இந்தியா வேகமாக மீண்டுள்ளது. பொருளாதார ஜிடிபி வளர்ச்சியானது உள்நாட்டு தேவை மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏப்ரல் 2022 இல் பணவீக்க விகிதம் 7.8 சதவீதமாக உயர்ந்தது என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இறக்குமதிக்கு டாலரில் பேமெண்ட் செலுத்தப்படும் வேளையில், டாலர் அதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும். கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கலாம், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications