பணத்தை சிக்கனமாக சேமிக்க வேண்டுமா? இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க.. அடுத்த லட்சாதிபதி நீங்கதான்
சென்னை: பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாங்கும் சம்பளம், போகும் பாதையே தெரியவில்லை என சமானிய மக்கள் புலம்பி வருகின்றனர். இருப்பினும், சிக்கனமாக சேமித்தால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக 50-30-20 என்கிற ரூல்ஸை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
1990களுக்கு முன்னாள் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்தில் யாராவது ஒருத்தருக்கு மட்டுமே வேலை கிடைத்திருக்கும். ஆனால், அந்த வேலை சமூக பாதுகாப்பானதாக இருக்கும். ஏனெனில் அந்த காலத்தில் அவ்வளவாக தனியார் நிறுவனங்கள் கிடையாது. எல்லாம் பொதுத்துறைதான். பொதுத்துறையில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. எனவே, கொஞ்ச, நஞ்சம் இருந்த தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்கள் பின்பற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு அம்சங்களையும், தனியார் நிறுவனங்களும் பின்றபற்றி வந்தன.

பின்னர் தனியார்மயம் அமல்படுத்தப்பட்டது. நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டன.. வேலைவாய்ப்பு அதிகரித்து. ஆனால், இந்த வேலையில் சமூக பாதுகாப்பு கேள்விக்குறியானது. எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானலும் வேலையை விட்டு துரத்தலாம் என்கிற சூழல் உருவானது. அதேநேரம், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பு அம்சங்களும் காற்றில் பறக்கவிடப்பட்டன. ஊதியம் மிக, மிக அடிப்படையானதாகவே இருந்தது.
இதனால் சேமிப்பு என்கிற பேச்சிக்கே இடம் இல்லாமல் போனது. உதரானமாக சென்னையில் பட்டதாரி இளைஞர் வேலைக்கு புதியதாக சேருகிறார் எனில், அவருக்கு ரூ.12 ஆயிரம் அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் அந்த இளைஞர் ஒரே நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வரை பணியாற்ற முடியும். இந்த காலத்தில் ஊதியம் ரூ.30-40 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது என்று வைத்துக்கொண்டால்.. வீட்டு வாடகை, போக்குவரத்து, உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கே சம்பளம் மொத்தம் காலி.
இதற்கிடையில் சினிமா, பீச், பார்க் என போனால்தான் காதல், திருமணம் ஆகியவை நடக்கும். திருமணத்திற்கு பிறகு ஆகும் செலவு தனி. இப்படி வர சம்பளம் சாப்பாட்டுக்கும், வாடகைக்குமே கழிந்துவிடுகிறது. மேற்கொண்டு பைக், டிவி, செல்போன் போன்றவற்றை வாங்குவதற்கு இஎம்ஐ-ஐ நாடி செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் வேலை சிக்கல் ஏற்பட்டு அதை விட வேண்டிய சூழல் ஏற்பட்டால்.. மொத்தமும் போச்சு!
அப்போதுதான் சேமிப்பின் அருமை தெரியும். ஆனால் கையில் எந்த சேமிப்பும் இருக்காது. முன்கூட்டிய திட்டமிட்டால் இந்த நிலைமையை தவிர்க்க முடியும்.
இதற்காக பொருளாதார ஆலோசகர்கள் 50-30-20 விதியை முன்வைக்கின்றனர். இதை கடைபிடிப்பது ரொம்ப சிம்பிள்.. அதாவது உங்களின் அடிப்படை செலவுகளை மொத்த சம்பளத்தில் 50% குறைத்துக்கொள்ள வேண்டும். வாடகை, வீட்டு கடன், கரண்ட் பில், தண்ணீர் கட்டணம், மளிகை பொருட்கள், மொபைல் இஎம்ஐ, பெட்ரோல் செலவு, ஹெல்த் இன்சூரன்ஸ் என எல்லாம் இதில் அடங்கிவிட வேண்டும்.
மீதமுள்ள 50 சதவிகிதத்தில் 30% வருமானத்தை, சினிமா, பார்க், பீச், ஓட்டல் உணவு, ஆடை வாங்குதல் போன்றவற்றிற்கு செலவழிக்கலாம்.
கடைசியாக உள்ள 20%ஐ சேமிக்க வேண்டும். இந்த சேமிப்புதான் வாழ்க்கையில் எந்த நெருக்கடி வந்தாலும் அதை எதிர்த்து போராட உங்களுக்கு மன வலிமையும், பொருளாதார வலிமையையும் வழங்கும். எனவே இந்த ஃபார்முலாவை கவனமாக பின்பற்றுங்கள்.
இந்த ஃபார்முலா சர்வதேச அளவில் பிரபலமானதாகும். அமெரிக்க செனட்டரும் முன்னாள் ஹார்வர்ட் சட்டப் பேராசிரியருமான எலிசபெத் வாரன் மற்றும் அவரது மகள் அமெலியா வாரன் தியாகி ஆகியோரால் உலகம் முழுக்க இது பிரபலப்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து எழுதிய 'ஆல் யுவர் வொர்த்: தி அல்டிமேட் லைஃப்டைம் மணி பிளான்' எனும் புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications