Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் 2 பெரிய பகுதிகளை இணைக்கும்.. மிகப்பெரிய இரும்பு ராட்சசன்.. வரப்போகும் மெகா மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தைக் கணிசமாக குறைக்கும் வகையில், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் மிக முக்கியமான எஃகு பாலத்திற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய சாலை திட்டமானது, துரைப்பாக்கத்தில் அமையவுள்ளது. இது 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும், நான்கு வழித்தடங்கள் கொண்ட இருவழிச் சாலையாகவும் வடிவமைக்கப்பட உள்ளது.

chennai ecr omr

ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை

பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே அமையவுள்ள கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) இரும்பு இணைப்புப் பாலத்திற்கான திட்ட வரைபடங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 1.465 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய சாலை, நான்கு வழித்தடங்கள் மற்றும் இருவழிப் போக்குவரத்து வசதியுடன் அமைக்கப்படவுள்ளது.

தற்போது தொரைப்பாக்கம் பகுதியில் இந்தத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் அப்பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே அமையும் பாலம், ECR-OMR இணைப்பிற்கு மிக முக்கியமானதாகும். இதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை விண்ணப்பித்துள்ளது.

இந்த இணைப்புப் பாலம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றை இணைத்து, அப்பகுதி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். தொரைப்பாக்கம் (OMR) முதல் நீலாங்கரை (ECR) வரையிலான இந்த இரும்புப் பாலத்தை, ₹37 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்கவுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில், ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் பண்டு மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 4 மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் வெளியேறும் வசதியுடன், படகு இயக்கத்தையும் அனுமதிக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்படும்.

பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே பாலம்

OMR பக்கத்திலிருந்து 1.4 கிமீ இணைப்புச் சாலையின் ஒரு பகுதி ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. தொரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரத்தின் OMR-ECR இணைப்பு இரும்புப் பாலம் கட்டும் பணி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ₹21 கோடி மதிப்பில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் மூன்று இரும்புப் பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில், கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து, வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சென்னை ECR மற்றும் OMR சாலைகளை இணைக்கும் திட்டம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில், தற்போது இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ₹1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், OMR மற்றும் ECR-ல் தற்போதைய ஒன்றரை மணி நேர பயண நேரத்தை அதிகபட்சமாக 20 நிமிடங்களாகக் குறைக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வேகம் எடுத்த பணிகள்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ஒரு ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. 1.8 கிமீ நீளமும், ₹40 கோடி செலவும் கொண்ட இந்த இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தைக் குறைத்து, நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாகப் பயணிக்க உதவும்.

CPRR முடிந்ததும், பல்வேறு இடங்களுக்கான இணைப்புத் திறன் அதிகரிக்கும். உதாரணமாக, எண்ணூரில் இருந்து புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாகப் பயணிக்க தற்போது ஆகும் ஐந்தரை மணி நேரம், மூன்றரை மணி நேரமாகக் குறையும். இது பயண நேரம், எரிபொருள் செலவு மற்றும் வாகனத் தேய்மானம் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைக்கும்.

மேலும், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வெளிவட்டச் சாலையும் (ORR) விரிவுபடுத்தப்படவுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு, 62 கிமீ வெளிவட்டச் சாலையின் இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ₹2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+