நடிகை கௌதமியிடம் 10 மணி நேரமாக விசாரித்த அமலாக்கத்துறை.. அழகப்பன் மோசடி வழக்கில் முக்கிய சாட்சி!
சென்னை: நடிகை கௌதமியிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்துள்ளது. தொழிலதிபர் அழகப்பன் வழக்கில் கௌதமியிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
தன்னுடைய சொத்துகளை தொழிலதிபர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அபகரித்ததாக நடிகை கௌதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, காவல் துறை முக்கிய விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் போது அழகப்பன் மீது பல புகார்கள் வைக்கப்பட்டதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அழகப்பன் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாட்டு முதலீடு செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சாட்சியங்கள் என்ற அடிப்படையில் நடிகை கௌதமியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நடிகை கௌதமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி தனது விளக்கங்களை வழங்கியுள்ளார். காலை 10 மணி முதல் நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications