பென் டிரைவ் பூதம்.. ஃபைல் மாறியதா? செந்தில் பாலாஜிக்கு ‘பலே’ பதில் கொடுத்த ED.. பரபரத்த கோர்ட்!
சென்னை: பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க் திருத்தப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு பகீர் வாதங்களை வைத்த நிலையில், அதற்கு அமலாக்கத்துறை இன்று பதில் அளித்துள்ளது. ஒரு பென் டிரைவ் ஆவணத்தின் தேதி மாறியதால், எல்லா ஆவணங்களும் ஏற்கதக்கத்தல்ல என்றாகிவிடாது என அமலாக்கத்துறை வாதிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே உடல் நலக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ஜாமீன் பெற உச்ச நீதிமன்றம் வரை சென்று, அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை: இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்" என வாதிட்டார்.
மேலும், அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது 5 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பென் டிரைவ் திருத்தப்பட்டுள்ளது: சோதனையின் போது HP ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது, ஆனால் அதன் பிறகு Seagate ஹார்ட் டிஸ்க்கை சமர்ப்பித்துள்ளனர். அமலாக்கத்துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா? பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது என ஆர்யமா சுந்தரம் வாதங்களை அடுக்கினார்.
ஆர்யமா சுந்தரம், பென் டிரைவ் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக வைத்த வாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "செந்தில் பாலாஜி தரப்பில் குற்றம் சாட்டுவதை போல் எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை. அனைத்து ஆவனங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் உரிய அனுமதியுடன் பெற்றோம்" என பதில் வாதத்தை முன்வைத்தார்.
பென் டிரைவை திருத்தவில்லை - அமலாக்கத்துறை: மேலும், செந்தில் பாலாஜியிடமிருந்து பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு பறிமுதல் செய்து சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த ஆதாரங்கள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மட்டுமே அமலாக்கத் துறை பெற்றது. அந்த ஆதாரங்கள் எதுவும் திருத்தப்படவில்லை என தெரிவித்தார்.
வழக்கில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை. அவை 2020ஆம் ஆண்டில் பெறப்பட்டு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் உருவாக்கவும் இல்லை; திருத்தவும் இல்லை. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கு ஆவணங்களை மட்டுமே அமலாக்கத்துறை நம்பியுள்ளது எனக் குறிப்பிட்டார்.
உதாரணம் சொன்ன ED வழக்கறிஞர்: மேலும், ஒரு பென் டிரைவ் ஆவணத்தின் தேதி மாறியதால், எல்லா ஆவணங்களும் ஏற்கதக்கத்தல்ல என்று ஆகிவிடாது. உதாரணத்திற்கு ஒரு வழக்கு விசாரணையில் ஒரு புத்தகத்தை கைப்பற்றுகிறோம். அதில் ஒரு பக்கத்தில் ஒருவரின் கையெழுத்தும், இன்னொரு பக்கத்தில் வேறு ஒருவர் கையெழுத்தும் உள்ளது. அதன் காரணமாக அது ஆதாரமாக ஏற்கப்படாதா? என கேள்வி எழுப்பினார் அமலாக்கத்துறை தரப்பிற்காக வாதாடிய ஏ.ஆர்.ஆர்.சுந்தரேசன்.
மேலும், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை தவிர அவரது முந்தைய ஜாமீன் மனுவிற்கும், இந்த மனுவிற்கும் எந்த மாற்றமும் இல்லை. இன்னமும் அவர் செல்வாக்கு மிக்கவராகவே விளங்குகிறார். சாட்சிகளை இன்னும் விசாரிக்காத நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தந்தால் அவர் சாட்சிகளைக் கலைக்கக் கூடும். 30 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர் ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம். நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதங்களை வைத்தது அமலாக்கத்துறை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications