நோ தூக்கம்.. பொன்முடியிடம் விடிய விடிய.. ரெடியான அமலாக்கத்துறை! சாஸ்திரி பவனில் தொடங்கிய விசாரணை
சென்னை: அமைச்சர் பொன்முடியை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை விடிய விடிய நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை, உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் அலுவலகங்கள் அமலாக்கத்துறை தீவிர சோதனை மேற்கொண்டது. அதை தொடர்ந்து அன்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருக்கும் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பியுமான கௌதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.
விழுப்புரம்த்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சரின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடத் தொடங்கினர்.
சோதனை தொடங்கும்போது அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோரும் வீட்டீலேயே இருந்து உள்ளனர். அவர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தடயவியல் குழுவினர் பொன்முடி தொடர்புடைய விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. 14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்து வரும் இந்த தீவிர சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள பணம், வெளிநாட்டு கரன்சி போன்றவை கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
அதேபோல் பொன்முடி வீட்டில் இருந்த பீரோ சாவி காணாமல்போனதால் மாற்று சாவி தயாரிப்பவர்களை அழைத்து வந்து சாவி செய்து அதில் அமலாக்கத்துறை சோதனையிட்டு உள்ளது.
இந்த நிலையில் 13 மணி நேர தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு சோதனை தொடர்பாக முழு விபரங்கள், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு தகவலும் கிடைத்ததால் அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளார்கள். மற்றொரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் சாஸ்திரி பவனுக்கு சென்றனர். அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், இந்த விசாரணை விடிய விடிய நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications