Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு நெருக்கடி? கோர்ட் தீர்ப்பை கவனிச்சீங்களா! சரவணன் ‛பளிச்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கி இருந்தாலும் அமலாக்கத்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என எடுத்து கூறினோம். அதனை நீதிபதி நிஷா பானு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு பற்றியும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கி உள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்ற காவலில் தனியார் மருத்துவமனையில் உள்ளார்.

இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகக் கூறி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே நிஷாபானு, டி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

மாறுபட்ட தீர்ப்பு: வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் நிஷா பானு - பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். ‛‛செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்'' என நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி, "தள்ளுபடி செய்யக்கூடிய மனு இது. செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட கஸ்டடியில் இல்லை. சிகிச்சை நாட்களை நீதிமன்றம் காவல் நாட்களாக கருத முடியாது" என தீர்ப்பு வழங்கினார்.

ED faces big setback on Minister Sentil Balaji Habeas corpus case verdict, says DMK lawyer Saravanan

3வது நீதிபதி நியமனம்: இதையடுத்து இந்த வழக்கில் 3வது நீதிபதியாக சிவி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர் நாளை முதல் விசாரணை நடத்த உள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது பற்றி திமுக வழக்கறிஞர் சரவணன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பின்னடைவு: இந்த தீர்ப்பு என்பது திமுகவின் சட்டத்துதுறைக்கும், சட்ட போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி தான் என சொல்ல வேண்டும். முக்கியமாக நிஷா பானு செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும். கைது சரியான கைது அல்ல. சட்டவிரோதமான கைது என தெளிவாக கூறியுள்ளார். அதேபோல் அமலாக்கத்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு.

எங்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தை கூட பின்பற்ற வேண்டாம். எங்களுக்கு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்காமல் கைது செய்யலாம் என வாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் கைது செய்ய முடியாது. நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக்கூறி மனித உரிமை சார்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளார்.

அதிகாரம் இல்லை: மேலும் போலீஸ் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதை கூறியுள்ளனர். இதுவரை இந்தியாவில் இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டது இல்லை. இந்த பாயிண்ட்டை இந்த வழக்கில் தான் முதல் முறையாக டெஸ்ட் செய்கிறோம். அமலாக்கத்துறைக்கு அதிகாரமே இல்லை என எடுத்து கூறினோம். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இனி இந்தியா முழுவதும் அமலாக்கத்துறையின் அதிகாரம் என்ன? என்பது பற்றிய விவாதம் வரும். மோசடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டால் 20 நாளில் ஜாமீன் கிடைத்துவிடும். ஆனால் பணம் மீட்கும் வரை ஜாமீனில் விடமாட்டேன் என்பது போல் அமலாக்கத்துறையின் ஷரத்துகள் சரியா? என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. அரசியல் சார்ந்தும் எழுந்துள்ளது.

ஆதாரங்கள் அழிப்பா? செந்தில் பாலாஜி ஆதாரங்களை அழித்துவிடுவார் என அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றம் கூறிவருகின்றனர். எந்த ஆதாரங்கள் 10 ஆண்டுகள் கழித்து இருக்கும்? என தெரியவில்லை. அஜித் பவார் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளாராம். அவர் யார் என்றால் மகாராஷ்டிராவின் துணை முதல்வர். அமலாக்கத்துறையினர் அவருக்கு ஒரு சம்மன் கொடுக்க முடியுமா? அவரை கைது செய்ய முடியுமா?

சரி அஜித் பவாரை விடுங்க.. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கு சம்மன் கொடுக்க முடியுமா?. பிரபுல் படேலுக்கு சொந்தமான ரூ.1000 கோடிக்கு சொந்தமான கட்டடத்துக்கு சீல் வைத்தனர். தற்போது அதற்கு சீலை எடுத்து விடுவார்களா?. செந்தில் பாலாஜி திமுகவை சேர்ந்தவர். 10 ஆண்டு முந்தைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதான் இந்தியா முழுவதும் கேள்வியாக உள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல்: அமலாக்கத்துறைக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. இந்த வழக்கிற்கு எல்லாம் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளார். 10 வருடத்துக்கு முந்தைய சின்ன வழக்கு தான் இது. ரூ.50 அல்லது ரூ.60 லட்சம் தான் வழக்கே. ஆனால் ரூ.80 ஆயிரம் கோடி, ரூ.70 ஆயிரம் கோடி, ரூ.1000 கோடி வழக்குகளை விட்டுவிட்டு இந்த வழக்கில் வந்து ஆதாரங்களை அழிப்பதாக கூறுகிறார்கள் என்றால் அது நகைப்புக்குரியது. இது குற்றவியல் நீதி நிர்வாகத்தை ஜோக்காக்கி வருகின்றனர்.

மேலும் ஆதாரங்களை செந்தில் பாலாஜி அழிப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறுவது என்பது அபத்தமான வாதம். இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் என்பவர் முக்கிய வழக்குகளில் மட்டுமே ஆஜராவார். அரசியலமைப்பு, சட்டம்சார்ந்த பிரச்சனைகள் உள்ள வழக்குகளில் மட்டுமே ஆஜராவார். நீண்டகால நிலுவை வழக்கை தீர்ப்பு என்றால் ஆஜராவார். ஆனால் இதுபோன்ற வழக்குகளில் எல்லாம் ஆஜராகி ஆதாரங்களை அழிப்பதாக கூறினால் 10 ஆண்டுகளில் அழிக்க முடியாத ஆதாரங்களை 10 நாட்களில் அவர் அழித்து விடுவாரா?'' என்றார்.

50:50 வாய்ப்பு: இந்த வேளையில் நீதிபதி பரத சக்ரவர்த்தி உங்களின் வாதத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனால் 3ம் நீதிபதி அதையும் கவனத்தில் கொண்டு 2ல் ஒன்றை தானே தீர்ப்பாக வழங்குவார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛ வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் 50:50 என்ற அளவில் வாய்ப்புள்ளது. ஆனால் இன்றைக்கு அமலாக்கத்துறையின் அதிகாரம் இந்தியா முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. இதற்கு நீதிபதி நிஷா பானுவின் ஒற்றை தீர்ப்பு காரணமாக உள்ளது.

அமலாக்கத்றையின் அதிகாரங்கள் மனித உரிமைகள் மீறும் வகையில் உள்ளது. தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறுகின்றனர். செலக்ட்டிவ்வாக செயல்படுகின்றனர். ப சிதம்பரம், டிகே சிவக்குமார், சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா, நவாப் மாலிக், சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அஜித் பவாரை கைது செய்யவில்லை. இது தான் பாஜகவின் நடைமுறை. எல்லாரையும் மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் திமுகவிடம் அவர்களின் பாட்சா பலிக்காது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+