அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.
தூத்துக்குடி, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியில் உள்ள அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

கடந்த 2002-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அடுத்து அமலாக்கத்துறை வசம் சென்றது. விசாரணை கைமாறிய உடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறை அதிரடி காட்டியது.
அனிதா ராதாகிருஷ்ணன் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் உட்பட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, சொத்துக்களை முடக்கியது. இந்த விவகாரத்தால் டென்ஷன் ஆன அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை தொடர கூடாது என்று கேட்டிருந்தார். வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அமர்வுக்கு முன்பு வந்தது.
அமலாக்தக்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகியிருந்தார்."வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஆதலால் வழக்கை ரத்து செய்ய கூடாது. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தனர். மட்டுமல்லாது விசாரணையை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications