சட்டவிரோத பணபரிவர்த்தனையில் மையப்புள்ளியே செந்தில் பாலாஜிதான்.. சிக்கிய ஆதாரங்கள்.. ED தகவல்
சென்னை: சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் மையப்புள்ளியாக அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார் என அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கன்டக்டர், தொழில்நுட்பப் பணியாளர்கள், டிராப்ட்ஸ்மேன் போன்ற பணியிடங்களுக்கு பலரிடம் பணம் பெற்றதாக கணேசன் என்பவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் சிபிசிஐடி போலீஸார் 3 குற்ற வழக்குகளை பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள நிலையில் அவர் மீது 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை அமலாக்கத் துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் நேரில் ஆஜரான போதே வழங்கப்பட்டுள்ளது.
அந்த குற்றப்பத்திரிகையில் இருப்பதாவது: போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் மூலம் பலரிடம் பெரும்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கிடைத்த செந்தில் பாலாஜி நேரடியாகவே பெற்றுள்ளார். அந்த பணத்தை தனது வங்கிக் கணக்கிலும் தனது மனைவி மேகலா, தம்பி அசோக்குமார், உறவினர்கள் சிலரது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார்.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக உதவியாளர்களால் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களும் கிடைத்துள்ளன. செந்தில் பாலாஜி திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆவணங்களும் கிடைத்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றத்தில் மையப்புள்ளியாக செந்தில் பாலாஜி செயல்பட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தனக்கு தொடர்பில்லை என செந்தில் பாலாஜி கூறினாலும் அவரது அதிகாரத்தின் கீழ்தான் இந்த முறைகேட்டுக்கான சதி நடந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் எத்தனை பணியிடங்கள், ஒவ்வொரு பணியிடத்திற்கும் எவ்வளவு பணம் நிர்ணயிக்கப்பட்டது, யாரிடம் எவ்வளவு பணம் வாங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களும் பென் டிரைவ்களும் கிடைத்துள்ளன.
அந்த பணத்தை செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் சேர்ந்து வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான டிஜிட்டல் டிரான்ஸாக்ஷன் ஆதாரங்களும் உள்ளன. செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை ஒப்பிட்டு பார்க்கும் போது முரண்பாடுகள் உள்ளன என அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications