’கொடைக்கானல்’ மலையை குடைய போகும் அமலாக்கத்துறை.. கொத்தாக சிக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அடுத்ததாக அதிமுகவை குறிவைத்து சோதனைகளை தொடங்கும் என கூறப்படும் நிலையில் இந்த சோதனைகளில் 'கொடைக்கானல்' மலைதான் பிரதானமாக இருக்கப் போகிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட எந்த ஒரு கட்சியையும் அந்த கட்சி சும்மா விட்டுவைத்தது இல்லை. பால்தாக்கரேவின் சிவசேனாவை சிதைத்து சின்னா பின்னமாக்கிய கதையை நாடறியும். இத்தனைக்கும் சிவசேனாவும் இந்துத்துவா கொள்கையை பேசுகிற கட்சிதான். ஆனால் துரோகம் செய்துவிட்டதாக பாஜக நினைத்ததால் பழிவாங்கிவிட்டது.

ED officials to target AIADMKs Kodaikanal Colony?

டார்கெட் அதிமுக: அப்படிப்பட்ட சிவசேனாவுக்கே அந்த கதி என்றால் அதிமுகவை சொல்லவா வேண்டும்? அதுவும் தமிழ்நாட்டில் காலூன்ற கதியாக காத்திருந்த கிடக்கும் பாஜகவின் ஒற்றை வாய்ப்பு அதிமுகதான். அந்த அதிமுகவே தங்களை தூக்கி எறிந்துவிட்டு போய்விட்டது என்பது டெல்லியை கடும் கோபப்படுத்தி இருக்கிறது என்பது தெரிந்ததுதான். அதுவும் 62 எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருக்கும் அதிமுக கொத்து கொத்தாக கூறு போடுவது என்பதெல்லாம் டெல்லி பாஜக தலைமைக்கு அத்துப்படியான ஒன்றுதான்.

இப்போது திமுக: இப்போதைக்கு அமலாக்கத்துறையின் குறி தமிழ்நாட்டில் திமுகவாகத்தான் இருக்கிறது. இது திமுகவின் சீனியர் தலைவர்களை மட்டுமே குறி வைத்ததாக இருக்கிறது. திமுகவை சிதைப்பது/ உடைப்பது என்கிற வகையில் எதுவுமே தென்படவில்லை. ஆனால் அமலாக்கத்துறை அடுத்ததாக அதிமுகவையே குறி வைத்திருக்கிறது என கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு குறி?: திமுகவைப் போல அதிமுகவின் சில சீனியர் தலைவர்களை மட்டுமே அமலாக்கத்துறை குறிவைக்காதாம். மொத்தமாக எம்.எல்.ஏக்களையும் சேர்த்து குறிவைத்து இந்த ரெய்டு நடக்கப் போகிறதாம். அதாவது அதிமுகவை உடைக்கும் வகையில் அதிரடி காட்டப் போகிறதாம் அமலாக்கத்துறை. இதன் ஒரு பகுதியாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை குறி வைத்திருக்கிறதாம் அமலாக்கத்துறை.

கொடைக்கானலில் என்ன இருக்கிறது?: கொடைக்கானலில் 'அதிமுக காலனி' என சொல்லும் வகையில் முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரது பெயரில் சில குறிப்பிட்ட மலை கிராமங்களில் பெருமளவு சொத்துகள் இருக்கின்றன. இந்த சொத்துகள் அனைத்தும் அதிமுகவின் பிரச்சனை உச்சகட்டமாக இருந்த போது 'பெருந்தலை' ஒருவரால் 'அன்பளிப்பாக' கொடுக்கப்பட்ட கைமாறுதானாம். இவ்வளவு 'பெரிய அன்பளிப்பு' எப்படி சாத்தியமானது? யாரெல்லாம் மூலமாக இவ்வளவு நிலம் கைமாறியது? என அக்குவேறு ஆணிவேறாக அலசப் போகிறதாம் அமலாக்கத்துறை என்கின்றன டெல்லி தகவல்கள். அப்படி செய்யும் போது சிக்குபவர்களை தங்கள் வசமாக்குவதுதான் டெல்லியின் ப்ளான் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+