ED Raid: சபரிமலை தங்கம் திருட்டு.. சென்னையில் 14 மணி நேரம் விடாமல் துருவி எடுத்த அமலாக்கத்துறை!
சென்னை: சபரிமலை அய்யப்பன் கோவிலில், 4.54 கிலோ தங்கம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில், 21 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் அமலாக்கத்துறை 6 இடங்களில் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க மூலாம் பூசியபோது 4.5 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 21 இடங்களில் ஒரே சமயத்தில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரின் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் வாரிய தலைமையகம் மற்றும் உன்னிகிருஷ்ணன் போட்டி இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும், சென்னையில் மட்டும் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் எனும் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. அமலாக்கத்துறை உதவி இயக்குநர் முகேஷ் குமார் தலைமையில் 3 அதிகாரிகள் மற்றும் 4 துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் காவலர்களின் உதவியுடன் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
14 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனை நிறைவுபெற்றது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பங்கஜ் பண்டாரி சிறையில் உள்ள நிலையில் ஊழியர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல பங்கஜ் பண்டாரி வீடு, சென்னை சௌகார்பேட்டையில் உள்ள பணியாளர் கல்பேஷ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டின் நிறைவில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications