எடப்பாடி பழனிசாமி உறவினர் ஈரோடு ராமலிங்கம் வீடு உட்பட 26 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கத்தின் சென்னை, பெங்களூர், ஈரோடு வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஈரோடு ராமலிங்கம். எடப்பாடி பழனிசாமி மகனின் சகலையின் தந்தைதான் ராமலிங்கம். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை செய்து வருகிறார். கர்நாடகாவில் ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வருமான வரி சோதனையில் ரூ152 கோடி சிக்கியிருந்தது.

இந்த வழக்கில்தான் ஏற்கனவே எடப்பாடியின் உறவினரான ராமலிங்கம் வீடுகளில் பல முறை வருமான வரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் மொத்தம் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் ஈரோடு ராமலிங்கத்தின் சென்னை, கோவை, ஈரோடு, பெங்களூர் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில், கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நிதி நிறுவன அதிபர்களிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு பல கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர்கள்தான் இவர்கள் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல்லில் வாசவி நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வரிசையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான ஈரோடு ராமலிங்கம் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications