அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக அழைத்துச்சென்ற அமலாக்கத்துறை.. 13 மணிநேர ரெய்டுக்கு பின் பரபர
சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அவர் விசாரணைக்காக அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராகவும், திமுகவின் மூத்த தலைவராகவும் இருப்பவர் பொன்முடி. இவரது மகன் கௌதம சிகாமணியும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, தொடர்புடைய சோதனை செய்யப்பட்டதைபோன்றே இவருக்கு தொடர்புடைய இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று துணை ராணுவ பாதுகாப்புடன்
விழுப்புரம், சென்னை சைதாபேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் வீடு, மற்றும் அலுவலகங்கள், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையை தொடங்கினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வங்கி அதிகாரிகள் பொன்முடியின் இல்லத்துக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் தடயவியல் குழுவினர் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் ரூ.70 லட்சம் மதிப்பு பணம், வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
அவரது வீட்டில் இருந்த பீரோ சாவி இல்லாத நிலையில் மாற்று சாவி தயாரிப்பவர்களை அழைத்து வந்து சாவி செய்து அதில் சோதனையிட்டனர். இந்த நிலையில் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
பொன்முடியை அவரது இல்லத்தில் வைத்தபடியே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சோதனை தொடர்பாக முழு விபரங்கள், கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு தகவலும் கிடைத்ததை அடுத்து அவரை சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்று உள்ளனர். அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க உள்ளனர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து செல்கிறார்கள். மற்றொரு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறையினரும் சென்றனர்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications