"பச்சை சிக்னல்" தந்த சசிகலா.. ரெடியாகும் தலைகள்?.. அனலை கிளப்பிய அறிக்கை.. பரபரக்கும் அதிமுக..!
"பச்சை சிக்னல்" தந்த சசிகலா.. ரெடியாகும் தலைகள்?.. அனலை கிளப்பிய அறிக்கை.. பரபரக்கும் அதிமுக..!
சென்னை: அதிமுகவின் தேர்தல் விதிகள் மாற்றப்பட்டு உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் இன்றைய அரசியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதிமுகவின் தேர்தல் விதிகள் மாற்றப்பட்டு உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது... ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிமுகவே பிஸியாக உள்ளது.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருமே கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகின்றனர்.. இவர்களை தவிர வேறு யாராவது இந்த பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சசிகலா
முக்கியமாக சசிகலா என்ன செய்ய போகிறார் என்பது ஆவலாக உள்ளது.. காரணம், இவ்வளவு நாள் சசிகலா ஒதுங்கியிருந்து அரசியல் செய்து வரும் நிலையில், இனியும் அப்படி செய்ய முடியாது என்பதைதான் உட்கட்சி தேர்தல் விவகாரம் உணர்த்தி வருகிறது.. இந்த நேரத்தில் சசிகலா விடுத்துள்ள அறிக்கை கட்சிக்குள்ளேயே புயலை வீசி வருகிறது.. சசிகலா எத்தனையோ அறிக்கையை விடுத்துள்ளார்.. இந்த அறிக்கையில் மட்டும் அப்படியென்ன இருக்கிறது?

அறிக்கை
அந்த அறிக்கையில், "அதிமுகவின் இன்றைய நிலையை பார்க்கும்போது, இதற்காகவா நம் இருபெரும் தலைவர்களும், தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி, ஓயாது உழைத்து கட்சியை காப்பாற்றினர் என்று நினைக்கும் போது, ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது... என்றைக்கு தனி மனித விருப்பு, வெறுப்புகளுக்கு இயக்கம் பயன்பட்டதோ, அன்றிலிருந்து அதன் மதிப்பு குறைந்தது, இதன் தொண்டர்களையும் மறந்தது.

நம்பிக்கை
நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது... ஒரு சிலருடைய தேவைகளுக்காகவும், விருப்பு, வெறுப்புகளுக்காகவும் செயல்பட்டு கொண்டிருக்கின்ற, நம் கட்சியை சரி செய்து, மீண்டும் அதை தொண்டர்களுக்கான இயக்கமாக, விரைவில் மாற்றிக் காட்டுவோம்.

அதிருப்தியாளர்கள்
அனைத்து தொண்டர்களும் கவலையின்றி இருங்கள். எவ்வித காரணமும் இல்லாமல் உதாசீனம் செய்யப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் சிறிது காலம் பொறுத்திருங்கள்... மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள். விரைவில், அதிமுக நிலை மாறும், தலை நிமிரும், இது உறுதி.. நான் ஓய்ந்து விட மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார்.

அதிருப்தியாளர்கள்
இத்தனை நாளும் பொதுவாக நம்பிக்கை தந்து அறிக்கை விடுத்து வந்தவர், இன்று அதிருப்தியாளர்களை நோக்கி இந்த அறிக்கையை சசிகலா விடுத்திருந்தார்.. சசிகலாவின் இந்த சூட்சுமத்தை உணர்ந்ததாலோ என்னவோ, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் சாயவும் இசைந்து வருவதாக கூறப்படுகிறது... கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பதில் சசிகலாவுக்கு இருக்கும் உறுதியும், நம்பிக்கையும் அதிமுகவின் அதிருப்தியில் உள்ள தலைவர்களேயே ஆச்சரியப்பட வைத்துள்ளதாம்,

ஜெயலலிதா
இதையேதான் அன்வர்ராஜாவும் ஓபனாக எடுத்து சொன்னார்.. ஆனாலும், எம்ஜிஆர் காலத்து தலைவர் என்றுகூட பார்க்காமல், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் பதவி வகித்தவர் என்று பார்க்காமல், எடப்பாடி அரசிலும் ஆட்சியில் இருந்தவர் என்பதை பார்க்காமல், ஓவர் நைட்டில் அறிக்கை விடுத்து நீக்கியது, பலருக்கும் அதிருப்தியையே பெற்று தந்துள்ளதாம்.. அன்வர் ராஜாவையே நீக்கும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம் என்ற மனப்பான்மையும் அதிருப்தி தலைவர்களிடம் குடிகொண்டுள்ளதாம்.
Recommended Video

அதிமுக
அதிமுக தலைமை பொறுப்புகளை முழுமையாக கைப்பற்ற ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் மும்முரமாக செயல்பட்டு வருவதும் சீனியர்களிடையே கலக்கத்தையும் பதற்றத்தையும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இப்போதைக்கு அதிமுக மேலிடத்தில் உள்ளவர்கள், தொகுதியை தழுவிய தலைவர்களாக உள்ளனரே தவிர, தமிழகம் தழுவிய தலைவர்களாக இல்லை என்ற வருத்தமும் உண்டு..

ஓபிஎஸ்
உதாரணத்துக்கு, எடப்பாடி அவர் தொகுதியில் வெற்றி பெறலாம், ஓபிஎஸ் அவர் தொகுதியில் வெற்றி பெறலாமே தவிர, ஒட்டுமொத்த தமிழகத்துக்கான தலைவர்களாக இவர் இல்லை என்பதையும் சீனியர்கள் உணர்ந்துள்ளனர். இதெல்லாம் பார்த்துதான் மனம் நொந்த சிலர், இதற்கு சசிகலாவே மேல் என்று முடிவெடுத்துவிட்டதாகவும், அதற்காக அடுத்தக்கட்ட மறைமுக நடவடிக்கையில் இறங்கி விட்டனராம்..

தேவர்பூஜை
அன்வர் ராஜா அப்படி என்ன தப்பாக சொல்லிவிட்டார்? தேவர் பூஜையில் ஓபிஎஸ் சொன்னதைதானே அன்வர்ராஜா சொன்னார்? இதே ஓபிஎஸ் அன்னைக்கு சசிகலா பற்றி பேசவில்லையா? இன்றைக்கு இவர்மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் என்ன அர்த்தம்? என்றும் முணுமுணுத்து கொள்கின்றனராம்.. இதற்கெல்லாம் அச்சாரமாகத்தான் சசிகலா விடுத்த அறிக்கையும் பார்க்கப்பட்டு வருகிறது. "உதாசீனம் செய்யப் பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், தாங்களாக ஒதுங்கி செயல்படாமல் இருப்பவர்கள் அனைவரும் சிறிது காலம் பொறுத்திருங்கள்" என்று அவர்களுக்கு சிக்னல் தந்திருப்பதாகவும் கருதப்படுசிகறது.

ஓபிஎஸ்
ஒருவேளை சீனியர்கள் சசிகலா பக்கம் சாய முடிவெடுத்துள்ளது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், எடப்பாடிக்கு பதிலாக சசிகலாவையே கட்சிக்கு தலைமை தாங்க வைக்கலாம் என்ற முடிவை விரைவில் எடுப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.. எதுவானாலும் வரும் வாரத்தில் இதற்கெல்லாம் முடிவு தெரியும் என்று நம்பப்படுகிறது.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications