Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புல் பவர்".. 18 பேரா? எடப்பாடிக்கு வந்த ஷாக்.. கொங்குவில் சைலண்ட் மூவ்.. நடக்க போகும் தரமான சம்பவம்

கொங்கு அதிமுகவில் குழப்பங்களும், அதிருப்திகளும் வெடித்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டத்தின் அனல் இன்னமும் அடித்து கொண்டே இருக்கிறது.. இதையடுத்து அக்கட்சிக்குள் என்னதான் நடக்கிறது? சீனியர்களின் அடுத்தடுத்த மூவ்கள் என்ன என்ற எதிர்பார்ப்புகளும் எகிறி வருகிறது.
அதிமுகவின் மா. செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 24-ம் தேதி நடந்து முடிந்தது.. ஏகப்பட்ட முட்டல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், களேபரத்துடன் இந்த கூட்டம் நடந்து முடிந்தாலும், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை, கூட்டம் நல்ல முறையில் மிக அமைதியாக நடந்து முடிந்தது என்று ஜெயக்குமார் பேசியுள்ளதை குறிப்பிட வேண்டி உள்ளது.

வழக்கமாக எந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்துமோதல்களும், அதிருப்திகளும் எழுவது சகஜம்தான்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி


ஆனால், இந்த முறை கட்சியின் சீனியர்கள் அன்வர் ராஜா மற்றும் செங்கோட்டையனின் ஸ்டண்ட்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இவர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு, மிகப்பெரிய ஷாக் தந்துள்ளது செங்கோட்டையன்தான்.. கொங்குவின் முதல் எதிர்ப்பு குரல் என்பதால் மட்டுமல்ல, கட்சி தலைமைக்கே செக் வைக்கும் வகையில் அவரது பேச்சு அன்றைய தினம் அமைந்திருந்ததும்தான்... அந்த வகையில் அதிமுக மேலிடம் என்ன நினைக்கிறது? குறிப்பாக எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை எப்படி கையாள போகிறார்? செங்கோட்டையனின் அன்றைய தின பேச்சின் நோக்கம் என்ன? என்பது குறித்தெல்லாம் நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்ன கருத்துக்களின் தொகுப்புதான் இவை:

சீனியர்

சீனியர்

செங்கோட்டையனை பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்து நபர்.. மூத்த நிர்வாகி.. எடப்பாடியைவிடவும் சீனியர்.. பல பொறுப்புகளை வகித்தவர்.. ஆனாலும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே செங்கோட்டையனின் பவர் பறிக்கப்பட்டுவிட்டது.. இதற்கு பிறகு செங்கோட்டையனும் மவுனமானார்.. ஜெ.மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையை செங்கோட்டையன் ஏற்று கொள்ளவில்லை.

சசிகலா

சசிகலா

இதற்கு பிறகு சசிகலா தரப்பில் சில சமாதான முயற்சி மேற்கொண்டதாகவும், அதில், செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று வாக்குறுதி தருவதாக சொல்லவும், அதற்கு பிறகே சசிகலாவின் தலைமையை செங்கோட்டையன் ஏற்பதாகவும் செய்திகள் வந்த நிலையில், அது அப்படியே அமுங்கி போய்விட்டது. காரணம், அப்போதைய 2 அமைச்சர்கள் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தக்கூடாது என்று சசிகலாவிடம் கிசுகிசுத்ததாக கூறப்பட்டது.

 வழிகாட்டுதல் குழு

வழிகாட்டுதல் குழு

இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென இன்று செங்கோட்டையன் தன்னுடைய அரசியலை விளையாட ஆரம்பித்துள்ளார்.. "மொதல்ல வழிகாட்டுதல் குழு போடுங்க.. ஆட்சி மன்ற குழுவை போடுங்க.. கட்சியின் எல்லா முடிவுகளையும் தலைமைதான் எடுக்கிறது என்றால், எதுக்காக அந்த வழிகாட்டுதல் குழு வைத்திருக்க வேண்டும்? ஒன்று, அதற்கான அதிகாரத்தை அதிகப்படுத்துங்க.. இல்லாவிட்டாடல் அதுக்கு குழுவை கலைச்சிடுங்க.. குழுவை கலைக்க முடியாது என்றால், ஏற்கனவே இருக்கும் 11 பேரில் எங்களுடைய ஆதரவாளர் 7 பேரையும் அதில் சேர்த்து மொத்தம் 18 பேரை நியமனம் செய்யுங்க..

முடிவுகள்

முடிவுகள்

அந்த குழுவில் உள்ள எங்களுக்கு மேலும் பிரதிநிதித்துவம் தரணும்.. முக்கியத்துவம் தரணும்.. கூட்டணி தொடர்பான முடிவுகள், வேட்பாளர் தேர்வு, கட்சி உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் இவைகளை எல்லாம் அந்த குழுதான் முடிவெடுக்கணும்.. அந்த குழுவுக்கு இனி ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்படணும்.. இந்த மாற்றங்களை செய்துவிட்டு உள்ளாட்சித் தேர்தல், உட்கட்சித் தேர்தல்களைச் சந்தித்தால் மட்டுமே கட்சிக்கு நல்லது" என்ற கோரிக்கையை மெல்ல வைக்கவும்தான் எடப்பாடி தரப்புக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

 உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது, செங்கோட்டையன் ஒதுங்கியே இருந்தார்.. பெரிதாக கட்சிக்குள் கருத்துக்களை சொல்லவில்லை.. எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.. உட்கட்சி பூசலிலும் இறங்கவில்லை.. தலையிடவும் இல்லை... அதேசமயம் செங்கோட்டையனின் கொங்கு மண்டல செல்வாக்கை, எடப்பாடி தரப்பு உணராமல் இல்லை.. அதனால்தான், பெரிய அளவு முக்கியத்துவம் தராமல் செங்கோட்டையனும் கொஞ்சம் ஒடுக்கியே இத்தனை வருடமும் வைத்திருந்தது.

 சீனியர்கள் குழு

சீனியர்கள் குழு

இப்போது திடீரென 18 பேர் கொண்ட குழுவை பற்றி பேசியதை எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கவில்லை.. அதுமட்டுமல்ல, 18 பேர் கொண்ட குழுவிற்கு செங்கோட்டையனையே தலைவராக நியமித்துவிடலாம், ஏனென்றால் அவர் கட்சியின் மூத்த தலைவர், அரசியல் அனுபவமும் பக்குவமும் நிறைந்தவர் என்று செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சிலரும் அந்த கூட்டத்திலேயே கருத்துக்களை பரவவிடவும், இதுவும் எடப்பாடி தரப்புக்கு டென்ஷனை எகிற வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகம்

சந்தேகம்

இப்படி ஒரு வழிகாட்டு குழுவை அன்று போட சொன்னதே ஓபிஎஸ்தான்.. குழுவை போட சொன்னாரே தவிர, அதற்கு அதிகாரம் தர வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்கவே இல்லை.. அமைதியாகவே இருந்து வந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியே வந்தது.. இப்போது கட்சியின் எல்லா சீனியர்களையும் அடக்கிய 18 பேர் லிஸ்ட்டை செங்கோட்டையன் ரெடி செய்து, அதற்கு தலைவராகவும் முயற்சிப்பது, இந்த நேரத்தில் மிகச்சிறந்த வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்த 18 பேர் என்பது சாதாரணமானவர்கள் இல்லை, எல்லாருமே சீனியர்கள்.. இவர்கள் வழிகாட்டும்படிதான், ஓபிஎஸ், இபிஎஸ் நடந்து கொள்ள முடியும் என்ற ரீதியிலேயே "புல் பவர்" கேட்கப்படுவதாக தெரிகிறது.. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி மீது பெருத்த நம்பிக்கையை செங்கோட்டையன் வைக்கவில்லை என்பதும் இதன்மூலமே நிரூபணமாகிறது..

தலைமை

தலைமை

ஒருவேளை சசிகலா பக்கம், செங்கோட்டையன் சாய போகிறாரோ என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகிறார்கள்.. ஆனால், அதற்கு வாய்ப்பிருக்காது.. செங்கோட்டையன் மீது சசிகலாவுக்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கை உள்ளதுதான்.. அதிமுக இரு அணிகளாக இருந்தபோதே, செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம் என்று சசிகலா தரப்பு அப்போது சொல்லியிருந்ததை மறுக்க முடியாது.. ஆனால், செங்கோட்டையனை பொறுத்தவரை தனி ஆவர்த்தனம் நடத்த பார்க்கிறார்.. யார் பக்கமும் சாய விரும்பவில்லை.. 18 பேர் கொண்ட குழுவை வைத்து கட்சியின் தலைமை பொறுப்பை அடைய நினைக்கிறார் போலும்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதை எடப்பாடி இனி எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியவில்லை.. கொங்குவில் ஒரு சீனியர் வருமானவரி மேட்டரில் சிக்கி உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணியை விட கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது... கொங்கு மண்டலத்தின் செல்லப்பிள்ளை.. கொங்கு மண்டலத்தில் அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் அதிமுக பிம்பமாக செங்கோட்டையன் பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒருபக்கம் சசிகலாவுடன் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் செங்கோட்டையனுக்கு இல்லாவிட்டாலும், திமுக அரசுடனும் மென்மை போக்கையே கடைப்பிடித்து வருகிறார்.. அதனாலதான் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தின்போதும், திமுக அரசு கண்ணியமாக நடக்கிறது என்று பாராட்டவும் செய்தார்.. எனவே, கொங்குவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து, அதேசமயம் கட்சி தலைமையை கைப்பற்றும் விஸ்வரூபத்தை நோக்கியே செங்கோட்டையனின் அரசியல் இருப்பதாக தெரிகிறது" என்றனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+