எடப்பாடி பழனிசாமிக்கு வந்த சிக்கல்.. அந்த "2.30 மணி நேரம்".. சசிகலா தந்த ஷாக்.. விஐபிக்கு அசைன்மென்ட்
சசிகலா - ரஜினி சந்திப்பு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம்
சென்னை: சசிகலாவின் சமீபத்திய அரசியல் நடவடிக்கைகள், அதிமுகவின் மேலிடத்துக்கு குழப்பத்தை தந்துள்ளதாம்.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அளவுக்கு அதிகமாகவே கதிகலங்கி போயுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் உட்பூசல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.. அதேசமயம், பாஜகவின் உத்தரவுகளை இதுவரை அதிமுக தட்டிக்கழித்ததுமில்லை..
பாஜக மேலிடத்தை அளவுக்கு அதிகமாக பகைத்து கொள்ளாமல், அதிமுகவின் அரசியல் மெல்ல நகர்ந்து கொண்டுள்ளது.. சமீபத்தில், நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் புதிய விதி கொண்டு வரப்பட்டு, கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு, ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜகவின் அழுத்தத்தில்தான் இப்படி ஒரு விதி கொண்டுவரப்பட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

பாஜக
அதாவது, இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிழல் அதிமுகவின் மீது அழுத்தமாக விழுந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது... இன்னும் ஓபனாக சொல்லப்போனால், பிரதான எதிர்கட்சியைப்போல பாஜக செயல்பட விரும்புவதாகவும், அதனால் அதிமுகவை ஓவர்டேக் செய்து, திமுகவுக்கு நேரடியாகவே செக் வைக்கும் வியூகத்தை பாஜக கையில் எடுப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் தெரிந்தும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருமே பாஜகவிடம் நேரிடையாக மோதவும் முடியாமல், திமுகவை எதிர்க்க வலுவில்லாமலும் தவித்து வருகின்றனர்.

தம்பதி
இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா செய்த காரியம் அதிமுக மேலிடத்தை அதிர வைத்துள்ளது.. சமீபத்தில் ரஜினிகாந்த், லதா தம்பதியினரை சசிகலா சந்தித்து பேசியிருந்தார்.. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.. திடீரென ரஜினியை சசிகலா சந்தித்த விவகாரம்தான் எடப்பாடி தரப்புக்கு ஷாக்கை தந்துள்ளது.. ரஜினியின் உடல்நிலை விசாரிக்கவே சென்றதாக வைத்து கொண்டாலும், அதற்காக இரண்டரை மணி நேரம் ஆகுமா? இரண்டரை மணி நேரம் ரஜினியின் வீட்டில் சசிகலா இருந்ததை எடப்பாடியால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லையாம்.

என்ன நோக்கம்?
அதேசமயம், இந்த சந்திப்பின் நோக்கம் என்ன? சசிகலாவுக்கு ரஜினி ஏதேனும் வாக்கு கொடுத்திருக்கிறாரா? என்றெல்லாம் அறிந்துகொள்ள எடப்பாடி முயற்சி செய்தாராம்.. இதற்காகவே, அதிமுக ஆட்சியின்போது உளவுத்துறையில் கோலோச்சி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரின் உதவியையும் நாடினாராம் எடப்பாடி பழனிசாமி.. அந்த அதிகாரியும், உளவுத்துறையில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக ரஜினிகாந்த் - சசிகலா சந்திப்பின் ரகசியங்களை அறிந்து கொள்ள முயற்சித்துள்ளார்.
Recommended Video

உளவுத்துறை
ஆனால், அந்த உளவுத்துறைக்கே, இந்த சந்திப்பில் பேசப்பட்ட தகவல்கள் முழுமையாக தெரியவில்லையாம்.. இது தெரிந்து எடப்பாடி பழனிசாமி மேலும் கலக்கமடைந்துவிட்டாராம்.. அப்படியானால், ரஜினி - சசிகலா சந்திப்பின்போதோ அல்லது சந்திப்பிற்கு பிறகோ, டெல்லியில் ஏதேனும் காய்கள் நகர்த்தப்பட்டுள்ளதா? என்று ஓய்வு பெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் முயற்சித்திருக்கிறார் எடப்பாடி... ஆனால், இன்னும் அந்த முன்னாள் நீதிபதியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையாம்... இதனால் நிமிஷத்துக்கு நிமிஷம் எடப்பாடிக்கு மட்டுமல்ல, ஓபிஎஸ்ஸுக்கும் சேர்த்தே பயமும், கலக்கமும் எகிறி வருகிறாம்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications