பெரும் புயலாக கிளம்பியது டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. இது என்ன அநியாயம்.. சட்டசபையில் மடக்கிய எடப்பாடி!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி இதனை தெரிவித்தார்.
அரசு வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இரவு பகலாக படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு பலரும் தயாராகின்றனர். தமிழ்நாட்டில் குரூப் 4 எழுத்துத் தேர்வு 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/Home.aspx) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு நடைபெற்று 8 மாதங்களுக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முதலிடம் பிடித்த மாணவர்
குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். குரூப் 4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2000 பேர் தேர்ச்சி
இதற்கிடையே, தங்கள் தேர்வு மையத்திலிருந்து 2,000 பேர் தேர்வானது உண்மைதான் என்று அந்த பயிற்சி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தேர்வான நபர்களின் பட்டியலை அளிக்கவும் தயார் என்றும் முறையான பயிற்சி அளித்து அதிக நபர்களை குரூப் 4 தேர்வில் வெற்றி பெற செய்துள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் வெற்றி பெற்றிருப்பதும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம் எழுப்பிய டாக்டர் ராமதாஸ்
இதுகுறித்து தேர்வர்கள் சந்தேகம் எழுப்பிய நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது என ராமதாஸ் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதனிடையே டிஎன்பிஎஸ் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். குரூப்-4 தேர்வு குறித்து அரசு விசாரிக்க பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். டி.என்.பி.எஸ். குரூப்-4 தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

முறைகேடு குழப்பம்
குரூப் 4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது, முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

டிஎன்பிஎஸ்சி முன் கூட்டம்
இதனிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய பலரும் சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக குவிந்துள்ளனர். தங்களின் தேர்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை என்றும் குற்றம் சாட்டினர். தங்களின் விடைத்தாள்கள் திருத்த தகுதியற்றவை என்று பதில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து விளக்கம் கேட்டு மனு அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications