இதுதான்டா திமுக.. கர்ஜித்த ஸ்டாலின்.. எடப்பாடியை நெருங்குகிறதா திமுக.. "வலதுகரம்" வீட்டிலும் சோதனை
எடப்பாடி பழனிசாமியின் நண்பரின் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் சேலம் இளங்கோவன் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்... இதையடுத்து அதிமுக மேலிடத்தில் பரபரப்பும், கலக்கமும் சூழ்ந்து வருகிறது.
விரைவில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளன.
இந்த நிலையில், அதைவிட பரபரப்பாக எடப்பாடி பழனிசாமியின் நண்பருடைய வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவது அரசியல் களத்தில் மேலும் சூட்டைகிளப்பி வருகிறது

இயல்பு
எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை அதிமுக தனித்து களமிறங்குகிறது.. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் எதுவாக இருந்தாலும், ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கமான இயல்பு.. இந்த முறை அதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.. இதைதவிர, கூட்டணியுடன் களமிறங்குகிறது திமுக.. அதுவும் இல்லாமல் அரசின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள், அறிவிப்புகள், சலுகைகளை சொல்லி ஓட்டு கேட்கிறது திமுக.. ஆக திமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

சிக்கல்
அந்த வகையில் அதிமுகவுக்கு இது மேலும் சிக்கலை தந்துள்ளது.. கூட்டணியும் இல்லாமல் தனித்து களமிறங்கும் சூழலில் அதிமுகவுக்கு இது கவுரவ பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நாகசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம் போன்ற 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 வார்டுகளில் தேர்தல் நடக்க போகிறது.. இது எடப்பாடியின் சொந்த மாவட்டமுமாகும்.

எடப்பாடி பழனிசாமி
அதனால், எக்காரணத்தை கொண்டும் சேலம் மேயர் பதவியை இழந்து விட கூடாது என்பதிலும், பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியாக வேண்டிய நெருக்கடியும் எடப்பாடிக்கு சேர்ந்துள்ளது.. அதேசமயம் எந்த வகையிலும் அதிமுக சேலத்தில் பலம் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக திமுக அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டவர்கள் சேலம் மாவட்டத்தில் புது புது வியூகங்களை கட்டவிழ்த்து வருகின்றனர்.

வாக்காளர்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், சேலம் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்காளர்களை கவர பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என்கிற புகார் வந்தது.. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் சேலம் மாவட்ட போலீஸ் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..

அதிர்ச்சி
குறிப்பாக எடப்பாடி தரப்பில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஒருத்தர் விடாமல் எல்லாரும் மாட்ட போகிறார்கள் என்று திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் சொல்லி கொண்டே இருந்தனர்.. அந்த வகையில் எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்து அதிமுக கூடாரத்தையே அசைத்து விட்டது.. அதிலும் எடப்பாடியின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட வேலுமணியின் சொத்துக்களையே முடக்கம் செய்தது, யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இதைதான் கடந்த சட்டசபை தேதர்தலின் பிரச்சாரத்திலும் ஸ்டாலின் சொல்லியிருந்தார்..

மிஸ்டர் வேலுமணி
"இது தான்டா திமுக... மிஸ்டர் வேலுமணி, திமுகன்ன என்னனு இப்போ தெரியுதா? பதவியில் இருப்பதால் இப்போது ஆடலாம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆட்டத்தை எல்லாம் அடக்கிவிடுவோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரோ இல்லையோ நானே தலையிட்டு உங்கள ஜெயிலுக்குள்ள தள்ளுவேன்" என்று கூறியிருந்தார்.. எடப்பாடிக்கு நெருக்கமான வேலுமணியிடம் சோதனை என்பதையும் தாண்டி, எடப்பாடியின் உதவியாளர் ஒரு தனிப்பிரிவு உதவியாளராக இருந்த மணி என்பவர் வீட்டிலும் ரெய்டு நடந்தது.. அவரை போலீசார் கைது செய்தது மேலும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது..

அதிமுக ஆட்சி
இதை தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவர் இளங்கோவன் வீடுகளிலும் ரெய்டு நடத்தி அவரையும் கைது செய்தது எடப்பாடிக்கு மேலும் ஷாக்கை தந்தது. எனினும் , தன்னுடைய கலக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளாமல், இதெல்லாம் காழ்ப்புணர்ச்சி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே எடப்பாடி சொல்லி வருகிறார்.. நான் 4 வருஷம் ஆட்சியில் இருந்தேனே... நான் நினைத்திருந்தால், திமுக-வினர் மீது எத்தனையோ வழக்குகளை போட்டிருக்க முடியும். ஆனால் செய்தோமா? என்று கேள்விகளை கேட்டபடியே உள்ளார்..

இளங்கோவன்
இப்படி, அதிமுக மாஜி அமைச்சர்கள் என்பதையும் தாண்டி, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான, & சொந்தமான & உறவுகளிடம் ரெயிடுகள் அடுத்தடுத்து நடத்தப்படுவது, எடப்பாடி பழனிசாமியை திமுக நெருங்கி கொண்டிருக்கிறது என்பதையே எடுத்து காட்டுவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, விரைவில் தேர்தல் உள்ள நிலையில், அது முடிந்ததும், ரெய்டு மற்றும் ஊழல் வழக்குகளின் மீதான விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்து வந்தது நினைவுகூரத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications