"ஆடு" பகை, குட்டி உறவு".. கைமீறி போகுதே.. பாஜக ராஜதந்திரம்.. ஸ்ட்ரைட் ரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: அமித்ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் என்ன நடக்கிறதென்பதே குழப்பமாக உள்ளதாம்.. மேலிட தலைவர்கள் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க, இனி அடுத்தக்கட்டத்துக்கு அதிமுக எப்படி நகர போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் மூலமாக திமுக - அதிமுக என தமிழகத்தின் 2 பெரிய கட்சிகளையும் பாஜக வாயடைக்க செய்திருப்பதாகவே பாஜகவினர் கருதுகிறார்களாம்.
சமீபகாலமாகவே, அதிமுக - பாஜக கூட்டணிகளுக்கு இடையிலான அதிருப்திகள் வெடித்தபடியே உள்ளன.. மேலிட பாஜக இணக்கமான போக்கை கையாண்டாலும், மாநில அளவில் அதிமுகவுடனான நெருக்கம் அவ்வளவாக காணப்படவில்லை.

செல்லூர் ராஜு: ஒரு சிறு இடைவெளி விடப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் 2 நாட்களுக்கு முன்பு, இவர்களின் மோதல் ஆரம்பமாகி உள்ளது.. செல்லூர் ராஜு ஒன்று பேச, பதிலுக்கு பாஜக நாராயணன் திருப்பதி பதிலடி தந்திருந்தார்.. மறுநாள் அண்ணாமலை ஒன்று பேச, ஜெயக்குமார் இன்னொரு பதிலடி தந்திருந்தார்.
இறுதியில், பாஜவை எதிர்த்து தீர்மானத்தையே அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றும் அளவுக்கு சென்றுவிட்டது. திமுகவை போலவே, அதிமுகவையும் அண்ணாமலை தாக்கி வருகிறார்.. ஓபனாகவே டேமேஜ் செய்து வருகிறார்.. தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதையும் விடாமல் பகிரங்கப்படுத்தி வருகிறார்.. அதுமட்டுமல்ல, திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட் வெளியிட்டபோதே, அதிமுகவையும் சீண்டியிருந்தார்.. "அதிமுக ஃபைல்ஸ்" வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.. இது அத்தனையையும் எடப்பாடி தரப்பு கவனிக்காமல் இல்லை..
மோதல்: அதுமட்டுமல்ல, திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டம் செய்தால் பின்னாடியே வந்து பாஜகவும் போராட்டத்தை அறிவித்து வந்தது. கள்ளச்சாராய விவகாரத்தில் அதிமுக பேரணியை அறிவித்தால், அண்ணாமலையும் உடனே வந்து போராட்டத்தை அறிவித்தார்.. இதையும் அதிமுக தரப்பு கவனிக்காமல் இல்லை..
இதைத்தவிர, காட்டமான மோதல்கள், குற்றச்சாட்டுகள், சவால்கள், சவடால்கள் என ஒவ்வொன்றாக நடந்து, இப்போது அதிமுக - பாஜக கூட்டணி முரண்பட்டு வெடித்து நிற்பதாக தெரிகிறது..
சந்தேகம்: இனி இது அடுத்தக்கட்டத்துக்கு எவ்வாறு நகரும் என்ற கேள்வியும் சந்தேகமும் கிளம்பி உள்ளது.. அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று பாஜக அறிவித்தாலும்கூட, வேறு சில பிரச்சனைகள் நிச்சயம் எழும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. தொகுதி பங்கீடு + சீட் விவகாரம், இன்னும் தேர்தல்வரை நிறைய விவகாரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அதிமுக அறிந்து வைத்துள்ளது.
மாநில தலைமை இப்படி சிக்கல்களை தருகிறது என்றால் தேசிய தலைமையோ, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + சசிகலாவை இணைத்து வைத்து மறைமுகமான நெருக்கடிகளை தருகிறதே என்பதுதான் அதிமுக தரப்பின் கவலையாக உள்ளதாம்.. இப்படி மாநில தலைமை ஒருபக்கம், தேசிய தலைமை ஒருபக்கம் என இருபக்கமும் நெருக்கடி தந்தால், கூட்டணியை விட்டே வெளியேறிவிடலாமா என்றுகூட அதிமுக தலைமை நினைக்கிறதாம்..
நெருக்கடி: பாஜகவை பொறுத்தவரை, திமுகவைவிட அதிக ஓட்டு வங்கி வைத்துள்ள அதிமுகவின் ஓட்டுவங்கியை இழந்துவிடக்கூடாது என்று கணக்கு போடுகிறது.. எனவே, நிச்சயம், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை எடப்பாடி தரப்பிடம் வலியுறுத்த தொடங்கும் என்கிறார்கள்.. அப்படி நெருக்கடி தந்தால், ஒற்றை தலைமை என்ற ஆளுமையே தன்னைவிட்டு போய்விடும் என்ற கலக்கமும் எடப்பாடிக்கு நிறையவே உள்ளது..
அப்படியே பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டாலும், அதிமுகவுடன் யார் யார் கூட்டணி வைக்க வருவார்கள் என்பதும் உறுதியாக தெரியவில்லை..
தேமுதிக, புதிய நீதிகட்சி, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமாகா, புரட்சி பாரதம், ஐஜேகே போன்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவானவை என்பதால், பாமக, விசிக இரண்டு கட்சிகளில், ஏதாவது ஒரு கட்சி தங்களுடன் கூட்டணிக்கு வந்துவிட்டாலும், அது அதிமுகவுக்கு பலம்தான்.. பாமக பாஜக பக்கம் சென்றுவிட்டால், திருமாவளவன் தங்களுடன் வந்துவிடக்கூடும் என்றும் அதிமுக யோசிக்கிறது.
சீட் கணக்கு: ஆனால், பாமக, விசிகவை மட்டுமே நம்பி களத்தில் இறங்க அதிமுகவுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது. எனவே, மாநில அளவில் வரும் விமர்சனத்தை உதறிதள்ளிவிட்டு, மேலிட பாஜகவுடன் இணக்கத்தையே இப்போதைக்கு கையாளலாம் என்றும், இப்போதுள்ளதை போலவே, அவர்களுடனேயே சீட் விவகாரம் உட்பட அனைத்தையும் பேசி முடித்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கு போடுகிறதாம்..!!
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications