பழக்கவழக்கமெல்லாம் பாஜகவோட தான்..கட்சி பக்கமெல்லாம் வர கூடாது! ஓபிஎஸ்க்கு ரெட் கார்டு போட்ட எடப்பாடி
சென்னை: தமிழக அரசியலில் நடக்கவே நடக்காது என எதிர்பார்த்த பல சம்பவங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்து வருகிறது. அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி சேர்ந்தது உள்ளிட்ட பல அரசியல் ட்விஸ்ட்களை உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் மற்றொரு 'மிஷன் இம்பாசிபில்' ஆக கருதப்பட்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு விரைவில் அரங்கேற போகிறது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமே இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவரை கூட்டணியில் சேர்க்க ஒப்புக்கொண்டுள்ளர். அதே நேரத்தில் அவைத்தலைவர் பதவியாவது தரவேண்டும் கட்சியில் சேர்ந்து கொள்கிறேன் என சொன்ன ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் மட்டும் இடமே இல்லை என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்..
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள வலுவான மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைமையகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

பாஜக மூலம் கூட்டணி
குறிப்பாக, அதிமுக வாக்குகள் பல்வேறு அணிகளாக சிதறாமல் ஒரே திசையில் திரள வேண்டும் என்பதே டெல்லி மேலிடத்தின் பிரதான கணக்காக இருக்கிறது. இந்த சூழலில், ஓபிஎஸ் தலைமையிலான அணியையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் பேசப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு தனித்து செயல்படுவதால், அதிமுக வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்ற மதிப்பீடு, இந்த சமரச முயற்சிகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக ஓபிஎஸ் மோதல்
அனைத்து தரப்பினரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் கூட்டணியே, ஆளும் திமுகவை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்ற பாஜகவின் அரசியல் கணக்கே இதற்குப் காரணம் என கூறப்படுகிறது. ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் வருகைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசியல் கள யதார்த்தம் காரணமாக தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
அதன் அடிப்படையில், ஓபிஎஸ் அணிக்கு 2 முதல் 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அவர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சூழலில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர விரும்பினால், எங்களுடன் தான் பயணிப்பார் என்று கூறியிருந்தார். இந்த கருத்து, ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக் கணக்கில் இடம்பெறப்போகிறார் என்பதற்கான முன்னோட்டமாகவே பலர் சொல்கின்றனர்.
ஓ பன்னீர்செல்வம்
பாஜக தலைமையிலான இந்த சமரச முயற்சிகளும், அதிமுக தரப்பு காட்டும் மென்மையான அணுகுமுறையும், 2026 தேர்தலில் அரசியல் களத்தை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளேன் என ஓபிஎஸ் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதால், அவர் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிபந்தனை ஒன்றையும் பாஜக மூலம் எடப்பாடி பழனிச்சாமி விதித்திருப்பதாக கூறப்படுகிறது, மூன்று முறை முதல்வராக இருந்த தான் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றால் அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.. மேலும் வேறு கட்சிக்கு செல்லும் எண்ணமும் இல்லை அதிமுகவில் ஒருபோதும் அதிகாரத்தை எதிர்பார்க்க மாட்டேன். அவைத்தலைவர் உள்ளிட்ட பதவியை கொடுத்தால் கூட போதும் அதிமுகவில் தொடர்ந்து பயணிப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் சொன்னாராம்.
அதிமுகவில் அனுமதியில்லை
ஆனால் எக்காரணத்தை கொண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் இடமே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணிக்கு வந்தால் நிச்சயம் மூன்று சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி தருகிறேன். தனி சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடட்டும். அவரது மகனுக்கும் வாய்ப்பு தரப்படும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிமுகவில் அனுமதியே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications