அடுத்தது தென் மாவட்டங்கள்.. எடப்பாடி பழனிசாமியின் 2ம் கட்ட சுற்றுப்பயணம்.. அதிமுக அறிவிப்பு!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன்படி 2ஆம் கட்ட பயணத்தில் 12 நாட்களில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கோவை மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணம், தற்போது கடலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
முதல் கட்டமாக கோவை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள 33 சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுக பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டது. அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றது.
2ஆம் கட்ட பயணம்
எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8 வரையில் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இபிஎஸ்
2ஆம் கட்டமாக 12 நாட்கள் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி ஜூலை 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தின் கந்தவர்க்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளிலும், ஜூலை 25ஆம் தேதி விராலிமலை, திருமயம் தொகுதிகளிலும், ஜூலை 26ஆம் தேதி காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதிமுக வெளியிட்ட பட்டியல்
ஜூலை 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியிலும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் திருவாடானை தொகுதிகளிலும் மக்களை சந்திக்க உள்ளார். தொடர்ந்து, ஜூலை 31ல் முதுகுளத்தூர், விளாத்திகுளம் பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளிலும், ஆகஸ்ட் 2ஆம் தேதி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம், வள்ளியூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி
ஆகஸ்ட் 4ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய தொகுதிகளிலும், ஆகஸ்ட் 5ஆம் தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி தொகுதிகளிலும், ஆகஸ்ட் 6ஆம் தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் பயணிக்க உள்ளார். ஆகஸ்ட் 7ல் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி தொகுதிகளிலும், ஆகஸ்ட் 8ல் சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications