விழுந்து விழுந்து படிக்காதீங்க பசங்களா.. 10ஆம் வகுப்புக்கான தேர்வு இப்போதில்லை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் 9000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தியா முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முத்ல 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏற்கெனவே எழுதிய அரையாண்டு தேர்வு, முழுஆண்டுக்கு தயாராகும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி கொடுப்பது குறித்து யோசனை செய்து வருகிறது.
எனினும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு என முதல்வர் அறிவித்துள்ளார்.
மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை 9.55 லட்சம் பேர் எழுதுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
11 ஆம் வகுப்புக்கு இன்னும் இரு தேர்வுகளும், 12 ஆம் வகுப்புகளுக்கு இன்னும் ஒரு தேர்வு இருப்பதால் அந்த வகுப்புகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்கான கால அட்டவணையும் பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்பதால் 9 லட்சம் மாணவர்கள் ஒன்று திரள்வது என்பது பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் இந்த முடிவை அறிவித்திருக்கலாம் என தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications