தூள் தூளா போச்சே.. "ஈஸியா உடையுங்க".. பார்ரா, இந்த ரணகளத்திலும் ஒரு பாசிடிவ்.. பலே எடப்பாடி பழனிசாமி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பசும்பொன் வருகை குறித்த சலசலப்புகள் இன்னமும் அரசியல் களத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது. இதுகுறித்த பிரத்யேக செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்திலிருந்து, ஆலமரம் போன்ற அதிமுக, கொங்கு கோட்டையாக மட்டுமே சுருங்கிவிட்டதாக ஒரு விமர்சனம் உள்ளது.. அதற்கேற்றவாறு, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கட்சியிலிருந்தே எடப்பாடி பழனிசாமி தூக்கியெறிந்துவிடவும், முக்குலத்தோர் மக்களின் கோபத்தையும் எடப்பாடி பழனிசாமி, பெருவாரியாக சம்பாதித்து கொள்ள நேரிட்டதை மறுக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி: இதற்கு நடுவில், வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் சேர்ந்து கொண்டதால், அந்த கோபம் இன்றுவரை எடப்பாடி மீது எதிரொலித்தவாறே உள்ளது. இதைத்தான், பசும்பொன்னில் நடந்த நிகழ்வும் தமிழகத்துக்கு எடுத்துக்காட்டி உள்ளது.
"தேர்தல் ஆதாயத்திற்காக வர வேண்டாம், பசும்பொன்னில் இருந்து வெளியேறுங்கள், எடப்பாடி பழனிசாமி ஒழிக, இபிஎஸ் ஒழிக, சசிகலாவை ஏமாற்றிய எடப்பாடி, தேவர் வாக்கை பெற வந்த எடப்பாடி" போன்ற எதிர்ப்பு முழக்கங்கள், எடப்பாடி பழனிசாமியை பசும்பொன்னிலிருந்து கிளம்பினாலும், பின்னாடியே விரட்டிகொண்டு வந்தன.
பாஜக அதிர்ச்சி: இந்த அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து, அதிமுக தரப்போ கூடாரமே அதிர்ந்துபோயுள்ளது.. ஓபிஎஸ், தினகரன், சசிகலா தரப்போ, மகிழ்ந்து போயுள்ளது.. பாஜக தரப்போ "இடிந்து" போயுள்ளது..
காரணம், "ஒருங்கிணைந்த அதிமுக"வுக்காக கடந்த 1 வருட காலமாக முயன்றுவரும்போது, தென்மண்டலத்தில் இந்த அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புகள் உள்ளதே என்று கலங்கி போயுள்ளதாம். அதனால், எப்படியும் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடியை சமாதானப்படுத்தும் முயற்சியை இனி, பாஜக கையில் எடுக்கலாம் என்கிறார்கள். எப்படி பார்த்தாலும் பசும்பொன் நிகழ்வு, அதிமுகவுக்கு சறுக்கலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
பிளஸ் பாயிண்ட்: ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, இந்த பசும்பொன் நிகழ்வையும் ஒரு பிளஸ் பாயிண்ட்டாகவே பார்க்கிறாராம். அதாவது, தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டுவிட்டு, ஊர் திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, மூத்த நிர்வாகிகளிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தாராம்..
அப்போது, ஒழிக கோஷம் முதல் வாகனத்தில் கல் வீச்சு சம்பவம் வரை பேசப்பட்டிருக்கிறது. அனைத்தையும் ஒன்றுவிடாமல் சீனியர்களிடம் பேசினாராம் எடப்பாடி பழனிசாமி..
அதுமட்டுமல்ல, " தேவர் நினைவிடத்துக்குள்ளே என்னை விடாமல் அவர்கள் ( ஓபிஎஸ், தினகரன் ஆட்கள் ) தடுத்து விடுவார்கள்.. என்னை ரொம்ப அசிங்கப்படுத்துவார்கள்... காரை வழிமறித்து ரகளை செய்வார்கள் என்றெல்லாம் நினைச்சேன். ஆனா, அப்படி ஒன்னும் பெரிசா நடக்கலை. இதுதான் அவங்களுடைய மொத்த செல்வாக்கும்..
முக்குலத்தோர்: அதனால், முக்குலத்தோர் சமூக மக்களிடம் நெருங்கி செல்லுங்கள்.. நிச்சயம் நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.. அந்த சமூகம் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயையை, இவர்கள் 2 பேரும் அங்கே உருவாக்கி வெச்சிருக்காங்க.. அதை ஈசியா உடைச்சிட முடியும்" என்று பகிர்ந்து கொண்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து, தென்மண்டலங்களில் மீண்டும் அதிமுகவின் கவனம் குவிய துவங்கியிருக்கிறதாம்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications