அதிமுக கொடிகட்டி காரில் சசிகலா பவனி...இனி பொறுக்கமாட்டோம்...சட்ட நடவடிக்கை..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னை: அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா கூறுவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக கட்சிக்குள் மீண்டும் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவை மீண்டும் எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா முயன்று கொண்டு இருக்கிறார். கழக பொதுச்செயலாளர் என்ற பெயரில் இவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
அதோடு கழக பொதுச்செயலாளர் என்று பெயர் பொறிக்கப்பட்ட காரில் இவர் அதிமுக பொன் விழாவின் போது எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கும், ஜெயலலிதா சமாதிக்கும் என்று மரியாதை செலுத்தினார். அதிமுக கட்சியை மீட்பேன் என்றும் சசிகலா தொடர்ந்து பேசி வருகிறார்.

விமர்சனம்
அதிமுக கொடிகட்டிய காரில் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சசிகலா சென்றார். தொடர்ந்து அதிமுக கொடி பொருத்திய காரை இவர் பயன்படுத்துவதையும், அதிமுக லெட்டர்பேடில் கழக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா அறிக்கை வெளியிடுவதையும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் எதிர்த்து உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் சசிகலாவிற்கு எதிராக பேசி உள்ளனர்.

பேட்டி
இந்த நிலையில்தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அதிமுகவின் பொதுச்செயலாளர் என சசிகலா கூறிவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம்.

நடவடிக்கை
அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்போம். அவங்க சொல்வதை சொல்லிட்டு போறாங்க.. எங்களுக்கு என்ன பயம். சூரியனை பார்த்து.... அதை சொல்லக்கூடாது ஓப்பனாக. அவர்கள் ஏதாவது சொல்லுவாங்க. சொல்லிட்டு போறாங்க. சசிகலா அதிமுகவில் இல்லை. கட்சியில் இல்லாத ஒருவரை பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

நாங்கள்தான் அதிமுக
உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று தேர்தல் ஆணையமே அறிவித்து உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நீதிமன்றமும் எங்கள் பக்கமே நின்றது. அவர் கட்சியிலேயே கிடையாது. இதை பலமுறை சொல்லிவிட்டோம். அவரை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. நீங்கள்தான் அவரை பற்றி பெரிதாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள், என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications