"சும்மா இருக்க மாட்டீயா.." ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை எச்சரித்த இபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுக் குழுவில அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசிய நபரை எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்தார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு இதோ அதோ என சொல்லி இன்று கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரகளையுடன் நடைபெற்றது. ஓபிஎஸ் வாகனம் வானகரன் திருமண மண்டபத்தில் நுழையும் போதிலிருந்தே நிர்வாகிகள் பிரச்சினை கொடுக்க தொடங்கிவிட்டனர்.
அவரது வாகனம் உள்ளே வரக் கூடாது என கூசசல் குழப்பம் எழுப்பினர். ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

ஓபிஎஸ் வாகனம்
ஓபிஎஸ் வாகனத்தை எடுக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஆக்ரோஷமாக வாகன ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓபிஎஸ் ஒரு அறையில் காத்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி விழா மேடைக்கு வந்தவுடன் நிர்வாகிகள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து ஓபிஎஸ்ஸும் விழா மேடைக்கு வந்தார்.

நிர்வாகிகள்
அங்கு அவரை நிர்வாகிகள் வெளியே போகுமாறும் துரோகி என்றும் கூறி கோஷமிட்டனர். பின்னர் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை ஓபிஎஸ் முன்மொழிய அதை இபிஎஸ் வழிமொழிந்தார். இதையடுத்து பேசிய சிவி சண்முகம் , தீர்மானங்களை இந்த பொதுக் குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது என ஆவேசமாக பேசினார்.

ஒற்றைத் தீர்மானம்
இதையடுத்து ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்களும் இன்னொரு பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என கே பி முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு அறிவிக்கப்பட்டார். அவர் வரும் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக் குழு கூடுகிறது என்றார்.

அண்ணன்
இதையடுத்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மேடையிலிருந்து வெளியேறினர். அப்போது ஓ பன்னீர் செல்வத்தின் மீது ஒருவர் தண்ணீர் பாட்டிலை வீசினார். நல்லவேளையாக அவர் மீது படுவதற்குள் ஜேசிடி பிடித்துவிட்டார். அப்போது அந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி கண்டித்தார். அது போல் ஒவ்வொரு முறையும் அண்ணன் ஓபிஎஸ் என்றே எடப்பாடி அழைத்தார்.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக்












Click it and Unblock the Notifications