அவசர கதியில் பொது பாடத்திட்டம் அமல்.. கல்வியின் தரம் குறையும்.. எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சென்னை: திமுக அரசின் பொது பாடத்திட்டம் முடிவு அவசர கதியில் உருவாக்கப்பட்டு அவசர கதியில் திணிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இதனால் உயர்கல்வியின் தரம் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது பாடத்திட்டம் இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதற்கு பல்வேறு கல்லூரி பேராசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் பொது பாடத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 26-08-2021 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி, பாடத்திட்ட மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட் சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ் நாடு அரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும்.
பாடப்பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 - 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில் இந்த, மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிகத் தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க 30-9-2021, 11-11-2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992 பிரிவு 10 (2) (4) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 922 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்ட, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
நான் முதல்வன்: தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
தொழில் துறை வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து வளர்ந்து வரும் தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப B.Sc. Artificial Intelligence, B.Sc. Internet of things,B.Sc. Computer Science, Artificial Intelligence and Machine Learning, B.Sc. Computer Science with Block Chain Technology, B.Sc. Computer Science with Augmented Reality and Virtual Reality போன்ற பல புதிய மாதிரிப் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ஒரே பாடப்பிரிவு: தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப் பல்கலைக்கழக பாடத்திட்டக் குழுக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அனுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவீத உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. முக்கியப் பாடங்களில் மட்டுமே பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று பொன்முடி கூறினார்.
எப்போது முதல் அமல்: இந்த கல்வி ஆண்டு முதல் (2023-2024) நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் எதேனும் நடைமுறை சிக்கல்கள் இருப்பின், ஆண்டு இறுதியில் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து சரி செய்யப்படும். மாதிரி பாடத்திட்டம் தொடர்பாக, அனைத்து தன்னாட்சிக் கல்லூரி முதல்வர்களுடன் 02.08.2023 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பு இல்லாமல் அவர்களின் கருத்துக்கள் கேட்டு தீர்வு காணப்படும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட் சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது'' என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையில் கொண்டு வரவுள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர் பொன்முடி சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திமுக அரசின் பொது பாடத்திட்டம் முடிவு அவசர கதியில் உருவாக்கப்பட்டு அவசர கதியில் திணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் உயர்கல்வியின் தரம் குறையும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் (யூஜிசி) வழங்கப்பட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
கல்வித்துறையில் ஏதேனும் மாற்றங்களை கொண்டு வரும் போது கட்சி கண்ணோட்டம் இல்லாத கல்வியாளர்களை அழைத்து இளைஞர்களின் நலன் கருதி கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications