Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, கட்சி தாவல்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு அதிமுக தொகுதி பங்கீடு செய்துவிட்டனர். இதில் அண்ணாமலை எதிர்பார்த்த தொகுதிகள் இல்லாததால் அவர் தேர்தலில் போட்டியில்லை என்று கூறப்படுகிறது. மாநில தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்ததை மனதில் வைத்துதான், எடப்பாடி சமயம் பார்த்து அவரை காலி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில துணை தலைவராக இருந்த அண்ணாமலை கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அதிமுக கூட்டணியில் இருந்ததால் அண்ணாமலை திமுகவை தான் அதிகம் விமர்சித்தார். ஆனால் மாநில தலைவரான பிறகு அண்ணாமலையின் டோன் மாறியது. கூட்டணியில் இருந்தபோதும் ஜெயலலிதா, அண்ணா குறித்து எல்லாம் கடுமையாக விமர்சித்தார்.

edappadi-palanisamy-edappadi-palanisamy-master-mind-defeated-annamalai-in-election-seat

அண்ணாமலையின் அதிமுக எதிர்ப்பு

இது கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒருகுட்டத்தில் அண்ணாமலையின் பேச்சுகளால் கடுப்பான அதிமுக பாஜகவின் கூட்டணியை முறித்தது. எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக தனித்தனியாக போட்டியிட்டது. தேர்தலுக்கு பிறகு அதிமுக என்கிற கட்சியே இருக்காது என்று அண்ணாமலை பொறிந்து தள்ளினார்.

அதிமுகவின் கோட்டையான கோவை தொகுதியில் களமிறங்கி அண்ணாமலை திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்தார். அந்த தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற, அதிமுக தற்றும் பாஜக 2 கட்சிகளும் படு தோல்வியடைந்தன. கோவையில் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி அவர்களின் பெயரை அண்ணாமலை பயங்கர டேமேஜ் செய்தார்.

டெல்லியின் மாற்றம்

அண்ணாமலை ஒன்றும் பாஸ் இல்லை. டெல்லி தலைமை தான் பாஜகவின் பாஸ் என்று எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையை விமர்சித்து வந்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மேலே பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் சில தொகுதிகளை கைப்பற்றி சற்று வலுவான நிலையில் அமர்ந்திருக்கலாம் என்பதால் அமித்ஷா உள்ளிட்டோர் அண்ணாமலை மீது கடுப்பானார்கள்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக இல்லாமல் சந்திப்பது வேலைக்கு ஆகாது என்று பாஜக தலைமை முடிவு செய்து அதிமுகவுக்கு தூதுவிட்டனர். இதுதான் வாய்ப்பு என்று எடப்பாடி பழனிசாமி கண்டிஷன்களை போட தொடங்கினார். முதல் பாலே அண்ணாமலையை க்ளீன் போல்டாக்கினார். அண்ணாமலை மாற்றப்பட்டால் தான் கூட்டணி என கிடுக்குப்பிடி போட்டார். அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவரானார்.

எடப்பாடியின் செக் மேட்

கட்சி நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை டம்மியாக்கப்பட்டார். 2026 முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலையில் இருந்தவர், இப்போது ஒற்றை சீட் கிடைக்குமா என்பதறியாமல் தவித்து வருகிறார். கோவையில் ஏதாவது ஒரு தொகுதி என்று அண்ணாமலை பிடிவாதம் காட்டுகிறார். ஆனால் அங்கு சிட்டிங் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்காக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அண்ணாமலையின் சொந்த ஊரான கரூரில் ஒரு தொகுதி கூட பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அண்ணாமலைக்கான கதவுகள் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டன. இதனால் கடுப்பான அண்ணாமலை, எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று டெல்லிக்கு கடிதம் அனுப்பி குமுறி கொண்டிருக்கிறார். எடப்பாடி குறித்து அப்போது அடித்த கமென்டுகளால் இப்போது வேதனையை அனுபவித்து வருகிறார்.

என்னவாகும் தேர்தல்

தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அண்ணாமலை, "தேர்தலில் போட்டியில்லை என்று ஓப்பனாக அறிவித்துவிட்டார். அவரின் வார்ரூம் ஆதரவாளர்கள் இப்போதும் பாஜக மற்றும் அதிமுக தலைமை குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் அண்ணாமலை அப்போது அமைதியாக இருந்திருந்தால், இப்போது இந்த நிலை வந்திருக்காது என்பதே எதார்த்தம்.

இதுகுறித்து பாஜகவினர், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. எதிரியும் இல்லை. எப்போதும் யாரையும் குறைத்து எடை போடக்கூடாது. எப்போது யாரின் தயவு வேண்டுமானாலும் தேவைப்படலாம். அரசியல் முதிர்ச்சி இல்லாததால் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை பகைத்துவிட்டார். சமயம் பார்த்த் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி அவரை சாய்த்துவிட்டார். டெல்லி தலைமை நினைத்தால் மட்டுமே அவர் தப்பிக்க முடியும்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+