வந்த வேகத்தில் தடா பெரியசாமிக்கு முக்கிய அசைன்மெண்ட் கொடுத்த எடப்பாடி.. பிளானை பார்த்தீங்களா?
சென்னை: பாஜகவில் இருந்து விலகி வந்து அதிமுகவில் சேர்ந்ததுமே, தடா பெரியசாமிக்கு முக்கிய அசைன்மெண்ட் கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு பாஜக பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்து வந்த தடா பெரியசாமி, கடந்த 30ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தார் தடா பெரியசாமி. சிதம்பரத்தில் தடா பெரியசாமிதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பாஜகவினரும் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால், வேலூரைச் சேர்ந்த முன்னாள் மேயர் கார்த்தியாயினி, சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிர்ந்து போனார் தடா பெரியசாமி. இந்நிலையில் தான் அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் தடா பெரியசாமி.
சிதம்பரம் தொகுதியில் நான் நின்றால் திருமாவளவன் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார். இது மிகப்பெரிய சதி. திருமாவளவனை வெற்றி பெற வைப்பதற்காக பாஜக துணை போயுள்ளது. அண்ணாமலை எடுத்தது தவறான முடிவு என தடா பெரியசாமி தெரிவித்திருந்தார்.
பட்டியலின சமூகத்தினருக்கு பாஜகவில் அங்கீகாரம் இல்லை. எனவே தான், எனக்கான அங்கீகாரத்தை தேடும் வகையில் அதிமுகவில் இணைந்துகொண்டேன். பாஜகவில் ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உழைப்பவர்களுக்கு அக்கட்சியில் அங்கீகாரம் இல்லை. பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறி இருந்தார் தடா பெரியசாமி.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக, தமிழ்நாட்டில் உள்ள 6 தனி தொகுதிகள் உட்பட 9 தொகுதிகளுக்கு தடா பெரியசாமியை அனுப்ப முடிவு செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 16 வரை தடா பெரியசாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் (தனி), விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), நாகப்பட்டினம் (தனி) திருவள்ளூர் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி (தனி) என ஏப்ரல் 16 வரை 9 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் தடா பெரியசாமி.
இந்த 9 தொகுதிகளில் 5 தொகுதிகள் பாஜக நேரடியாக போட்டியிடுபவை. 4 தொகுதிகள் பாஜக கூட்டணியில் உள்ள பாமக போட்டியிடுபவை. இந்த 2 கட்சிகளையும் குறிப்பாக தனி தொகுதியை குறி வைத்து தடா பெரியசாமியை பிரச்சாரக் களத்தில் களமிறக்கி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications