TNPSC தேர்வு கடைசி நொடியில் தள்ளிவைப்பு.. நிர்வாகம் இருக்கும் லட்சணம்.. காட்டமாக தாக்கிய எடப்பாடி!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று, நடத்தத் திட்டமிட்டிருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹால்டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடியால் சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி CEO சண்முகசுந்தரம், மற்ற மாவட்டங்களில் பிரச்சனை இல்லை. சென்னையில் மட்டுமே பிரச்சனை உள்ளது. சென்னையில் சிஎம்சி கல்லூரி, அரும்பாக்கம் சென்டர், நந்தனம் சென்டர் ஆகிய இடங்களுக்கு மட்டும் ஹால்கள் மாறி மாறி வந்துள்ளன.

இது மிகப்பெரிய தவறு.. வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம், என்று கூறி உள்ளார். இன்று காலை தேர்வுக் கூடங்களுக்கு வந்த ஆயிரக்கணக்கான தேர்வர்கள், ஹால்கள் ஒதுக்கீடு மற்றும் பதிவு எண்கள் மாறியிருந்தது போன்ற காரணங்களால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
TNPSC தேர்வு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்துள்ள விமர்சனத்தில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "நிர்வாகம்" என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ,
இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன,
"Technical Fault" என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் ,
குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு?
அந்த Fault- ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்
தமிழ்நாட்டை "சூப்பர்ஸ்டார்" மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர்
ஸ்டாலின் அவர்களே - ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.
ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2A தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி, அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல் , இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,
2026-ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும், என்று கூறி உள்ளார்.
தேர்வு ரத்து என்ன காரணம்?
சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A முதன்மை தேர்வு, அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் ஹால் டிக்கெட் குளறுபடி ஏற்பட்டதுதான் பிரச்சனையின் தொடக்கம். தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படாததால் மாணவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். நந்தனத்தில் தான் இருக்கை ஒதுக்கீடு என கூறி அவர்கள் வெளியே அனுப்பப்பட்டதால் தேர்வர்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு மைய அதிகாரிகளுடன் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து சென்னை முழுக்க பிரச்சனை இருப்பது தெரிந்ததால்.. தமிழ்நாடு முழுக்க தேர்வு ரத்தானது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு 2026 கால அட்டவணை மற்றும் தற்போதைய நிலை
முன்னதாக அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, இன்று பிப்ரவரி 8-ஆம் தேதி மதிய அமர்வில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் (தாள் I), பிப்ரவரி 22-ஆம் தேதி பொது அறிவுத் தேர்வும் (தாள் II) நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், இன்றைய குளறுபடிகள் காரணமாக முதல் தேர்வு மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான புதிய தேதிகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications