போதை பொருள், பிரிவினைவாதத்தை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.. எடப்பாடி பழனிசாமி வீடியோவில் பேச்சு
சென்னை: ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என தனது தேர்தல் பிரச்சார வீடியோவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே!

உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை !
https://aiadmk.com/manifesto2024/
தமிழ்நாட்டிந் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்கள் பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த தேர்தல்அறிக்கையினை தயாரித்துள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள். மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு , மேகதாது, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.
வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன்!
#தமிழர்_உரிமை_மீட்போம்!
#தமிழ்நாடு_காப்போம்!
நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும்
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
வாக்களிப்பீர் #இரட்டைஇலை
இவ்வாறு தனது வீடியோவில் பேசியுள்ளார்.
அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே!
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 24, 2024
உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை !https://t.co/6EQw5XodHF
வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று… pic.twitter.com/PvSV0lAZxm
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுகவின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி மு.பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, வரும் மார்ச் 24-ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோவில் பகுதியில் தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார். மார்ச் 26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடி விவிடி சிக்னல், எம்ஜிஆர் திடலிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் உள்ள வாகையாடிமுனையிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் திடலிலும், இரவு 7 மணிக்குத் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோயில் அருகிலும் பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 28-ம் தேதி மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் ஹைவே இன் அருகிலும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பல்லாவரத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள அன்னை தெரசா பள்ளி அருகிலும் பரப்புரை செய்கிறார். மார்ச் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் கடலூர் சாலையில் நீதிமன்றம் எதிரில் உள்ள ரோடியர் மைதானத்திலும், மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும் பரப்புரை செய்கிறார்.
மார்ச் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரம் புறவழிச்சாலையிலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூர் தெற்கு வீதியிலும் பரப்புரை மேற்கொள்கிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications