செதில் செதிலா நொறுங்கிடுச்சே! 1 வாரத்தில் அதிமுகவில் 10 மாற்றம்! எடப்பாடி அடிச்சு மேலே வந்துட்டாரே
சென்னை: அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது. ஜெயக்குமார் மட்டுமே எடப்பாடி உடன் இருக்கிறார், என்றெல்லாம் கடந்த வாரம் வரை செய்திகள் வந்தன. அதை எல்லாம் எடப்பாடி அடித்து உடைத்து இருக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் நான் ரீ என்ட்ரி ஆக போகிறேன். நான் மீண்டும் அரசியலுக்குள் என்ட்ரி ஆகும் நேரம் வந்துவிட்டது. இந்த பாருங்க.. நான் அரசாங்கத்தைக் கேட்கக் கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு.. எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை.. ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை செய்துகிட்டு இருக்கு? என்ன வேலை செய்துகிட்டு இருக்கு என ஊருக்கே தெரியுது.. உலகத்துக்கே தெரியுது.. உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்துல போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்களே..

அதிமுகவில் என்னுடைய அரசியல் தொடங்கும். மீண்டும் நான் ஆக்டிவாக இருப்பேன். அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் சாதி பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது. சாதி பார்க்கும் வழக்கம் தற்போது அதிமுகவில் வருவதை அனுமதிக்க முடியாது. லோக்சபா தேர்தலில் அதிமுக மூன்று, நான்காம் இடத்திற்கு செல்ல யார் காரணம் என்று சசிகலா கூறி உள்ளார்.
அதிமுக விரிசல்: எடப்பாடி தலைமைக்கு கீழ் அதிமுக அடுத்தடுத்து தோல்வி அடைந்ததே சசிகலா இப்படி பொங்கி எழ காரணம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
விரும்பவில்லை: இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் செயலை, அவர் எடுக்கும் முடிவுகளை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான். அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்? ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம்.
முக்கியமாக அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது. ஜெயக்குமார் மட்டுமே எடப்பாடி உடன் இருக்கிறார், என்றெல்லாம் கடந்த வாரம் வரை செய்திகள் வந்தன. அதை எல்லாம் எடப்பாடி அடித்து உடைத்து இருக்கிறார்.
அடித்து உடைத்த எடப்பாடி: தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் மூலம் எடப்பாடி அடித்து மேலே வந்துள்ளார். காட்சியிலும் 10 மாற்றங்கள் நடந்துள்ளன.
1. எடப்பாடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன்னை சிறந்த எதிர்க்கட்சி தலைவராக முன்னிறுத்தி உள்ளார்.
2. உடனே கேஸ் போட்டு சிபிஐ விசாரணை கேட்டதெல்லாம் திமுக ஸ்டைல். அதை எடப்பாடி கையில் எடுத்துள்ளார்.
3. திமுக எதிர்ப்பு என்பதை தாண்டி அதிமுக தொண்டர்களை இது எடப்பாடிக்கு கீழ் ஒருங்கிணைக்கும் .
4. திமுக எதிர்ப்பு என்பதை தாண்டி அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களை இது எடப்பாடிக்கு கீழ் ஒருங்கிணைக்கும். எடப்பாடிக்கு இது மிக அவசியம்.
5. சுணங்கி போய் இருந்த அதிமுக ஐடி விங்கை இது தட்டி எழுப்பி உள்ளது.
6. திமுகவிற்கு 2026 சட்டசபை தேர்தல் கண்டிப்பாக எளிதாக இருக்காது என்று எடப்பாடி டஃப் கொடுத்துள்ளார்.
7. ஒரு வகையில் தமிழ்நாடு அரசியலுக்கும் இதுதான் நல்லது. ஏனென்றால் எதிரி இல்லாமல்.. திமுக திசையறியாமல் ஓடும். இடிப்பாரை இல்லாத மன்னன் முறையற்ற வழியில் போகலாம். இப்போது அதிமுக எழுச்சி தமிழக அரசியலுக்கும் நல்ல ஆரோக்கிய மாற்றத்தை கொடுக்கும்.
8. எடப்பாடி எழுச்சியால் நாம் தமிழர்- விஜய் - அதிமுக கூட்டணி என்ற புதிய பிரச்சாரம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசியலுக்கும் இதுவும் மிக பெரிய மாற்று அரசியலாக அமையும்.
9. இது என்னுடைய நேரம் என்று சொன்ன சசிகலா.. மீண்டும் மாயமாகிவிட்டார்.
10. தமிழ்நாட்டிற்கு அரசியல் ரீதியாக.. மதுபான கொள்கை உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டிய சூழலை எடப்பாடி ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். இனிதான் தமிழக அரசியல் மேலும் சுவாரசியம் ஆக போகிறது.












Click it and Unblock the Notifications