"ரெடியா?.. ஸ்டாலின் தடுமாறுகிறார்".. திடீரென போனை போட்ட எடப்பாடி பழனிசாமி.. திணறி போன மாவட்ட தலைகள்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள மா.செ.க்களுடன் ஆலோசனை செய்துள்ளார் எடப்பாடி
சென்னை: சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.. என்ன காரணம்?
தற்போது அதிமுக பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.. தினம் தினம் சசிகலா வெளியிட்டு வரும் ஆடியோவால் அதிமுக தலைமை கிறுகிறுத்து போயுள்ளது.
உட்கட்சி பிரச்சனையை தீர்க்கவே எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் போதவில்லை.. இதற்கு நடுவில் திமுகவையும் சமாளிக்க முடியவில்லை.

அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கடந்த முறை, ஊரக தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது.. திமுகவுக்கு செல்லக்கூடிய வெற்றி வாய்ப்பையும் நாசூக்கான முயற்சியினால் அதிமுகவே பெற்றுவிட்டது.. இப்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மாவட்ட செயலாளர்கள்
இந்த நிலையில்தான், மாவட்ட செயலாளர்கள் பலருக்கும் போனை போட்டு பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. திடீரென எடப்பாடியார் போனை போட்டதுமே, மா.செ.க்கள் திணறிவிட்டனராம்.. உடல்நலம் குறித்து அவர்களிடம் விசாரித்துவிட்டு, பேச்சை ஆரம்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. "ஆட்சியை இழந்திருக்கிறோம் என்பதை நினைத்து கலங்காதீங்க.. உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது.. சுணங்கி விட வேண்டாம்.. ஏதோ சில வாக்குறுதிகளை நம்பி திமுகவை ஜெயிக்க வைத்துவிட்டனர்.

நம்பிக்கை
ஆனா, அதை நிறைவேற்ற முடியாததால் ஸ்டாலின் தடுமாறிக் கொண்டிருக்கிறார்... அதனால், உள்ளாட்சி தேர்தல் அவர்களுக்கு நெகட்டிவாகத்தான் இருக்கும்... நம்மிடையே இருக்கும் மனமாச்சரியங்களை புறம் தள்ளிவிட்டு உழையுங்கள்... உள்ளாட்சி தேர்தலில் நம்முடைய கட்சி மீண்டும் பெரிய வெற்றியை பெறும்" என்றெல்லாம் நம்பிக்கை தந்து பேசினாராம் எடப்பாடி பழனிசாமி.

உள்ளாட்சி தேர்தல்
அதுமட்டுமல்ல, எடப்பாடியின் இந்த நடவடிக்கைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட வேண்டிய நிர்பந்தம் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு இருக்கிறது... அதைக் கூட்டுவதற்கு முன்பாக , சோர்ந்திருக்கும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை தன் பக்கம் ஈர்க்கவே இத்தகைய நலம் விசாரிப்புகளை செய்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.. எனினும், உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா ? என்பதைப் பொறுத்து அதிமுகவின் பொதுக்குழு தேதி முடிவாகும் என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications