நடுரோட்டில் நிற்பார்! வார்த்தையை விட்ட டிடிவி தினகரன்! திரும்ப திரும்ப போட்டு பார்த்த எடப்பாடி! ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் கூறிய விஷயங்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் செய்தியில் போட்டு பார்த்ததாக கூறப்படுகிறது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதிமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிக்கவில்லை என பழனிசாமி குற்றச்சாட்டுக்கு டிடிவி தினகரன் பதில் அளித்த போது, தன்மானம்தான் முக்கியம் என கூறிவிட்டு பழனிசாமி டெல்லி சென்றது ஏன்?. பழனிசாமி படுபாதாளத்துக்கு தள்ளப்படுவார்; அதிமுக தோற்றால் நான் காரணம் அல்ல. அதிமுக கூட்டணிக்கு அமமுக உறுதியாக செல்லாது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க வாய்ப்பில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது அதிமுகவின் 122 எம்.எல்.ஏ.க்கள்தான்.

aiadmk ttv dinakaran edappadi palanisamy

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்ததுதான் அவர் முதல்வராக காரணம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏக்களே தவிர பாஜக அல்ல, கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் பழனிசாமி முதல்வரானார். ஆனால், தற்போது அப்பட்டமாக பொய் பேசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியை இப்போது போய் பார்க்கிறார். இப்போதுதான் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா கூறவில்லை. அதிமுகவில் தலைமையில் ஆட்சி என்றுதான் அமித் ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அமித் ஷா கூறவில்லை. இதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி நம்பகத்தன்மையற்ற தலைவர். பாஜகவிற்கு அவர் நன்றியோடு இருந்தால் 2024 லோக்சபா தேர்தலில் ஏன் கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் தாக்கி பேசினால் எடப்பாடி பழனிசாமியால் தாங்க முடியாது. 2026ல் அதிமுக தோற்றால் அதற்கு எங்கள் மீது பழி போட.கூடாது அதற்கு எடப்பாடிதான் காரணம். எடப்பாடி பழனிசாமி எல்லோருக்கும் துரோகம் செய்துவிட்டார். அவர் யாருக்குத்தான் செய்துள்ளார். எடப்பாடி செயலால் அவரும் அதிமுகவும் நடுரோட்டில் நிற்க போவது உறுதி, என்று டிடிவி தினகரன் கடுமையாக பேசி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

தஞ்சையில் செய்தியாளர் சந்திப்பில் கூறிய விஷயங்களை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் செய்தியில் போட்டு பார்த்ததாக கூறப்படுகிறது. அதாவது தன்னை பற்றியும், கூவத்தூர் பற்றியும் பேசிய பல விஷயங்களை டிடிவி தினகரன் பேசியதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமாக கூவத்தூர் ரகசியங்கள் என்று பல விஷ்யங்களை டிடிவி தினகரன் கூறியதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமித் ஷாவை பார்க்கும் போது, தன்னை டிடிவி தினகரன் தாக்கி பேசுவார் என்பதை எடப்பாடி பழனிசாமி நம்ப முடியாமல் அப்செட் ஆகி உள்ளார்.

நான் அமித் ஷாவை பார்க்க போகிறேன், அதை கூட இவர் விமர்சனம் செய்கிறார். இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவர் என்ன இவ்வளவு இறங்கி அடிக்கிறார்.. என்று எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆகி வருத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இனி நாமளும் சில விஷயங்களை இறங்கி அடித்து சொல்ல வேண்டும்.. நாமும் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+