பாஜக அசுர பலத்தோடு வந்தாலும்.. அசால்ட்டாக ஒதுக்கிய எடப்பாடி! கூட்டணி பற்றி ஒரு வார்த்தை இல்லையே! அட!
சென்னை: சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடந்த முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. இதில் பாஜக கூட்டணி பற்றி ஒரு சின்ன தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் கடந்த மார்ச் மாதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதேபோல் பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இதன் பொருட்டு அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வானார்.
அதோடு இல்லாமல் அதன்பின் செய்யப்பட்ட மேல்முறையீடுகளிலும் ஓ பன்னீர்செல்வம், தோல்வி அடைந்தார். உச்ச நீதிமன்றத்தில் அவர் நடத்திய சட்ட போராட்டங்களிலும் தோல்வியை தழுவினார்.
இன்று கூட்டம்: சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிகமுகவின் பொதுச்செயலாளர் என்று நீதிமன்றம் உறுதி செய்த பின் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் ஆகும் இது. பாஜக கூட்டணி முறிவுக்கு பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த போது பேசிய எடப்பாடி, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.
அண்ணா பெரியார் போன்றவரை தொடர்ந்து அவமதித்தும்,கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியும்,அதிமுக கட்சியை அவமானப்படுத்தும் வகையில் பேசியதும் பாஜக மாநில தலைமை தொடர்ந்து செய்து வருகிறது, என்று அண்ணாமலைக்கு எதிராக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமியர்கள் விரும்பியது போல நாங்கள் கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். இனி பாஜக கூட்டணியில் சேர மாட்டோம்.
என்ன சொன்னார்: இனிமேல் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
மீண்டும் கூட்டணி: இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம். நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. அதே சமயம் தெலுங்கானாவிலும், மிசோராமிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
வடக்கில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றது அந்த கட்சிக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாம். பாஜகவிற்கு இருக்கும் இந்த ஆதரவு மூலம் அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதை மனதில் வைத்து அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்கும் எண்ணம் எடப்பாடிக்கு வரலாம் என்றார்கள்..
மீண்டும் உருவாகிறதா?: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அசுர பலம் கிடைக்கும். அவர் கூட்டணியில் இருந்தால் பாதுகாப்பு. பாஜக தனியாக ஒருவேளை ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் கூட. அதிமுக எம்பிக்கள் ஆதரவில் ஆட்சி அமைக்க முடியும். நமக்கு அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்று அதிமுக கணக்கு போடுவதாக செய்திகள் வந்தன. முக்கியமாக பாஜகவின் அசுர பலத்தை பார்த்து அப்படி ஒரு கட்சியின் ஆதரவு தேவை என்று எடப்பாடி நினைக்க வாய்ப்பு உள்ளது என்று வாதங்கள் எழுந்தன.
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கூட்டணி பற்றி ஒரு வார்த்தை கூட அதிமுக பொதுக்குழு தீர்மானத்தில் இடம்பெறவில்லை.
அதிமுகவின் 23வது தீர்மானத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொது தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதில் கூட கூட்டணி என்ற வார்த்தை இடம்பெறவில்லை. பாஜகவிற்கு அசுர பலம் இருந்தும் கூட்டணி பற்றி அதிமுக முடிவு எடுக்கவில்லை.
அதிலும் ஜனவரி 2ம் தேதி மோடி தமிழ்நாடு வர உள்ளார். அதற்கு முன் கூட்டணி அதிமுக முக்கிய முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றே கருதப்பட்டது. ஆனால் இன்று அப்படி ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications